வாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,311.62 புள்ளிகள் குறைந்து 48,279.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 376.90 புள்ளிகள் குறைந்து 14,457.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கொரோனா அதிகரிப்பால் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது
ராஜேஷ். எஸ் | 12 Apr 2021 10:59 AM (IST)
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாதிரி படம்