உத்தரப் பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் வரதட்சணை தராததால் மணமகன் கல்யாண மண்டபத்திலிருந்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?


உத்தரப் பிரதேச அமைச்சர் தரம் பால் சிங் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் திருமண நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


முதலமைச்சரின் வெகுஜன் திருமண திட்டத்தின் கீழ் 144 தம்பதியினருக்கு சனிக்கிழமையன்று திருமணம் நடைபெற்றது. அப்போதுதான், 144 தம்பதிகளில் ஒருவர் திருமண மண்டபத்திலிருந்து ஓடியுள்ளார்.  இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "தண்ணீர் குடிப்பதாக பொய் சொல்லிவிட்டு அவர் மண்டத்திலிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.


இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்


அவர் திரும்பி வராததால் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போதும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர்தான், வரதட்சணையாக மணமகன் மோட்டார் சைக்கிள் கேட்டதை பெண்ணின் தாயார் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். மணமகள் தனது நிதி நெருக்கடியை காரணம் காட்டி தனது இயலாமையை வெளிப்படுத்தியபோது, ​​மணமகன் வெளியேற திட்டமிட்டு தப்பி ஓடிவிட்டார்" என்றார்.


இந்தியாவில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961லிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. வரதட்சணை தடைச்சட்டத்தின்படி இது ஒரு குற்றமாகும். 


கேரளாவில் சமீபத்தில் வரதட்சணை தொடர்பான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. எனவே, வரதட்சணை கொடுமைகளை தடுக்க அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். 


இதுகுறித்து அவர் பேசுகையில், “தற்போதுள்ள திருமண நடைமுறைகளில் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. திருமணம் என்பதை பெற்றோர் தங்களின் சொத்து மதிப்பின் பகட்டைக் காட்டும் கண்காட்சி போன்று நடத்தக்கூடாது. 


வரதட்சணையை ஊக்குவிக்கும் செயல்கள் நம் பெண் பிள்ளைகளை நாமே ஒரு பண்டத்துக்கு நிகராக தரத்தை குறைப்பதற்கு சமம். பெண் பிள்ளைகள் பண்டமல்ல அவர்கள் மனிதர்கள். அவர்களை இன்னும் கவுரவமாக நடத்த வேண்டும். 


ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்தும் சமுதாயமே நியாயமான சமுதாயம். அண்மையில் நடந்துள்ள குடும்ப வன்முறைச் சம்பவங்கள் கேரளாவை இன்னும் நியாயமான சமூகமாக மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. அநீதியை ஒழிக்க அரசும் மக்களும் தோளோடு தோள் சேர்ந்து இயங்குவர்" எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண