மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 2022 ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், இரண்டாம் அமர்வு நேற்று தொடங்கியது.  இந்தக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று தி.மு.க. மக்களவை எம்.பி. டி.ஆர்.பாலு, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என்று கடுமயாக பேசியுள்ளார்.


மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா இரண்டாவது முறையாக மீண்டும் தமிழக சட்டமப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர்  ஆர்.என். ரவி அதன் மீது இன்னும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.


அவை தொடங்கியவுடன் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, " இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஆளுநருக்கு நிறைய அதிகாரங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக மாநிலத்தில்  மசோதாவை சட்டமாக்கும் உரிமை வழங்கியுள்ளது. தமிழக ஆட்சிப் பொறுப்பேற்று முதலமைச்சர் இதுவரை 7க்கும் மேற்பட்ட மசோதாக்களை தாக்கல் செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதா உட்பட 7 மசோதாக்கள் குறித்தும் இன்னும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆளுநர் சட்டப்படி செயல்படவில்லை. குறிப்பாக கூட்டுறவு துறை மசோதா ( தமிழ்நாடு கூட்டுறவு துறை மசோதா 1983) குறித்தும் ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. அவர் ஜங்கிள் ராஜ் ஆட்சி நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.


மேலும், சட்டப்படி செயல்படாத தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.  ஜங்கிள் ராஜ் அதாவது ஆளுநர் சட்டப்படி செயல்படாமல் தன்னிச்சையாக, காட்டு ராஜ்ஜியம் செய்தவாகவும் கடுமையாக சாடினார்.


அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, "இது மாநில விவகாரங்கள் பற்றியது” என்று கூறினார்.


 


புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்தார் பேரறிவாளன்..!


Thirumavalavan in Parliament | நீங்க செஞ்சது இமாலய தவறு!திருமா ஆவேசம்!


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண