இந்த வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று ஏற்றதுடன் தொடங்கிய பங்குச் சந்தை, சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.


பங்குச் சந்தை தொடர்ந்து 6-வதுநாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் பி.எஸ்.இ. சென்செக்ஸ் 200 புள்ளிகள் அல்லது 0.02%  அதிகரித்து 56709.38 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52.90 புள்ளிகள் அல்லது 0.31%  16924.20 புள்ளிகளாகவும் விற்பனை ஆகிறது. 1459 பங்குகளில் 439 நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.  64 பங்குகளின் நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.


உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக பங்குச் சந்தை தொடர்ந்து சரிவில் இருந்தன. அதிலிருந்து மீண்டு, ஒரு வாரமாக பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகிறது.


ஏசியன் பேயின்ட்ஸ், எம்&எம், மாருதி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எல்&டி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டாடா கன்சியூமர், சிப்லா, இச்சர் மோட்டர்ஸ், டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2% உயர்ந்து லாபத்தில் வர்த்தகமாகின்றன.


மும்பை பங்குச்சந்தையில், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக்மகிந்திரா, கோடக்வங்கி, இன்போசிஸ் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன.


உக்ரைன், ரஷ்யாஇடையிலான பேச்சுவார்த்தை தொடங்குவதையடுத்து, கச்சா எண்ணெய் விலையும் படிப்படியாகக் குறைந்துவருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை அளித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்வுடன் முதலீடு செய்து வருகின்றன.


தேசியப் பங்குச்சந்தை நிப்டியில், வங்கி, ஆட்டோமொபைல், நிதிச்சேவை, எப்எம்சிஜி, மருந்துத்துறை, பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, ரியல் எஸ்டேட் துறைகள் ஆகியவை லாபத்தோடு நகர்கின்றன. அதேநேரம், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், உலோகத் துறை பங்குகள் சரிவில் உள்ளன.


இந்நிலையில், தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தை, காலை 11.30 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.43 புள்ளிகள் அல்லது 0.20% சரிந்து 56,366.59 ஆகவும், தேசிய பங்குச் சந்தை எண் நிஃப்டி 41.25 புள்ளிகள் அல்லது 0.24% சரிந்து 16,830 ஆகவும் வர்த்தகமாகிறது. உலக அளவில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன.


 


30 years of Ajithism: 30 வருட சகாப்தம்.. அஜித் டாப் 5 THUG LIFE சம்பவங்கள்


உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டம் தொடக்கம்..! திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..! விண்ணைப் பிளக்கும் கரகோஷம்..!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண