ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் மகிழ்ச்சி பொங்க வெளியில் வந்தார். அவரை ஆனந்தக்கண்ணீருடன் அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் ததும்ப வரவேற்றார்.  


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் மகிழ்ச்சி பொங்க வெளியில் வந்தார். அவரை ஆனந்தக்கண்ணீருடன் அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் ததும்ப வரவேற்றார்.  




முன்னதாக, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணை வந்தது. அப்போது, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் 1991ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனுக்கு இந்த 32 ஆண்டுகாலத்தில் ஜாமீன் வழங்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.


இதற்கு முன்னதாக, பேரறிவாளனுக்கு அவரது தந்தையின் உடல்நிலையால் அவரை நேரில் பார்ப்பதற்கு, பேரறிவாளனின் சிறுநீரக பிரச்சினைக்காக அறுவை சிகிச்சைக்கு உள்ளிட்ட சில காரணங்களுக்கு தமிழக அரசால் பல முறை பரோல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சிறையில் 32 ஆண்டுகளாக வாடிவரும் பேரறிவாளன், சாந்தனு, நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.




இந்த சூழலில்தான் பேரறிவாளன் தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் இன்று வெளியில் வந்துள்ளார். அவரை கண்ட அவரது தாயார் அற்புதம்மாள் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். 32 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஜாமீனிவ் வெளியே வந்த பேரறிவாளன் தனது தாயை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.


பேரறிவாளனுக்கு தற்போது  வழங்கப்பட்டுள்ள ஜாமீனில் வழக்கமான நிபந்தனைகளே நியமிக்கப்பட்டுள்ளன. அவர் ஜோலார்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் மாதத்திற்கு ஒருமுறை நேரில் சென்று கையெழுத்திட்டாலே போதும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இது வழக்கமான நிபந்தனை என்று அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், சிறையில் உள்ள மற்ற 6 பேருக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண