மனித வாழ்க்கையில் பிரிக்க முடியாது உப்பும், சர்க்கரையும் தான் என்று சொன்னால் அது மிகையில்லை. இந்தியர் நாளொன்றுக்கு 11 கிராம் உப்பை உட் கொள்வதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
இது உலக சுகாதார நிறுவனம் சொல்லும் அளவைவிட இருமடங்கு அதிகம்
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அளவுகோல் எப்படி சராசரியாக ஒரு மனிதர் நாள் ஒன்றுக்கு ஐந்து கிராமுக்கு குறைவாகவே உட்கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்கு பத்து ஸ்பூன் சர்க்கரையை உட்கொண்டால் ஒரு சராசரி இந்திய ஆண்டுக்கு 18 கிலோ சர்க்கரையை மக்கள் மனித உடலின் நுண்ணிய பிளாஸ்டிக் துயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதாக டாபிக் லிங்க் என்ற அரசு சாரா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை கூறுகிறது.
சர்க்கரையும் உப்பும் சாப்பிடுவதற்கு பிளாஸ்டிக் நுண் துகள்கள் உடலில் சேர்வதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும் நாம் சாப்பிடும் சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
கடந்த 2020- 2021 ஆம் ஆண்டுகளில் இருந்து உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்நிறுவனம் கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் தூத்துக்குடி, மரக்காணம் உள்ளிட்ட பல பகுதிகளில் உப்பு சர்க்கரை தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிறுவனத்தினர் கடலுக்கு பாறை உப்பு, கல்லு உப்பு போன்ற பத்து வகையான உப்பு வகைகளும், ஐந்து வகையான சக்கரைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது ஆய்வு முடிவில் உப்பு மற்றும் சர்க்கரை 0.1 இல் முதல் ஜீரோ மீட்டர் வரை பல்வேறு வடிவங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உப்பு தொடர்பான ஆய்வில், ஒரு கிலோவுக்கு 6.71 முதல் 89.15 வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகவும் அயோடின் உப்பில் அதிகபட்சமாக 89.15 பிளாஸ்டிக் துகள்கள், சாதாரண கல் உப்பில் 6.7 என்று அளவிலும் துகள்கள் இருந்ததாகவும் கூறுகிறது.
சக்கரையை பொருத்தவரை கிலோவுக்கு 15. 85 முதல் 35 வரை மைக்ரோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் தூத்துக்குடி, மரக்காணத்தில் கடல் உப்பு, கிணற்று உப்பு ஆகியவற்றில் இருந்து தலா 7 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மரக்காணம் மற்றும் பரங்கிப்பேட்டையில் நடத்தப்பட்ட ஆய்வில் உப்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் கடைகளில் விற்கப்படும் உப்புகள் என தலா ஆறு மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் பிளாஸ்டிக் நார்கள் இருப்பது ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிபுணர்கள் கூறியதாவது:-
இந்த பிளாஸ்டிக் துகள்கள் மூன்று வழிகளில் மனித உடலுக்குள் செல்கிறது. நேரடியாக உள்ளே செல்லுதல், மூச்சு இழுத்தல் மற்றும் நேரடியாக தோல் மூலம் செல்வது ஆகியவற்றின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எச்சில், நுரையீரல், கல்லீரல், தாய்ப்பால், வயிற்றில் உள்ள குழந்தை ஆகியவற்றில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பாதிப்பு இருப்பது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் 15 முதல் 51 ட்ரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் தகவல்கள் வெளியானது. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை மனிதன் முதல் விலங்குகள் வரை உட்கொள்வது உணவு சங்கிலிகளையே சிதைக்கிறது.
தற்போதைய குழுவின் மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக பிளாஸ்டிக் உள்ளது. அதை பார்த்தே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கடல் மண் உள்பட அனைத்திலும் தெரிந்து தெரியாமல் அதை அன்றாட உட்கொண்டு வருகிறோம். இவை வயிற்றில் உள்ள அமைப்புகளை பாதிக்கும் என்பார்கள். இதை நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் மரபணு மாற்றங்களை தூண்டுவதாகவும் உள்ளது. இதனால் புற்றுநோய், பக்கவாதம் பாதிப்புகளும் ஏற்படும். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.