அரூர் நகரில் திடீரென கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தனிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.


தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்து வந்தது. கோடை காலம் தொடங்கியவுடன் விவசாய கிணறுகளில் நீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாய பயிர்கள் முழுவதுமாக காய்ந்து கருகி வந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை மழை கை கொடுக்குமா என்று மாவட்டத்தில் உள்ள மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 




இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் நகர் பகுதியில் திடீரென மிதமான மழை பெய்தது. கடந்த ஓராண்டுக்கு பிறகு மழை பெய்ததால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கோடை வெப்பம் தினமும் 100 டிகிரிக்கு மேல் வீசி வருகின்ற நிலையில், இன்று திடீரென கோடை மழை பெய்ததால், பொதுமக்கள் வெப்பத்தை தனித்துக் கொள்ள மழையில் நனைந்து வாரே சென்றனர். இந்த திடீர் கோடை மழையால் வெப்பம் சிறிதளவு தணிந்து, குளிர்ந்த சீதோஷ்னை நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் இந்த கோடை மழை தொடர்ந்து பெய்தால், மட்டுமே காய்ந்து கருகி உள்ள பயிர்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.