மனு கொடுத்தும் பயனில்லை
ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் பால் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் பாலை கொட்டி மனு.
200 க்கும் மேற்பட்ட விவசாயிகள்
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள பெரமாண்டபட்டி கிராமத்தில் 25 ஆண்டுகளாக தமிழக அரசு ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் ஊற்றி வந்தனர்.
அரசு நிர்ணயித்த விலை கொடுப்பதில்லை
இந்த நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் சிவக்குமார் என்பவர் பால் கொள்முதல் செய்யும் பொழுது, பாலின் தரம் குறைவாக உள்ளதாக கூறி, அரசு நிர்ணயித்த விலையை விட, பாலுக்கு ருபாய் 10 வரை குறைத்து பணம் வழங்கியுள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அரசு 35 ரூபாய் லிட்டருக்கு வழங்கி வரும் நிலையில் விலை ஏன் குறைத்துக் கொடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.
விவசாயிகளின் பெயரை வைத்து பணம் கொள்ளை
ஆனால் பால் கொள்முதல் செய்யும் ஊழியர்கள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வருவதில்லை. மாறாக இரண்டு இளைஞர்களை வைத்து பால் கொள்முதல் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கேட்டால், உரிய பதில் கிடைப்பதில்லை. ஆனால் விவசாயிகளின் பெயரில் கணக்கு வைத்து, பணம் கொள்ளையடித்து வந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், போலி கணக்குகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்ந நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து விவசாயிகள் பால் கொள்முதல் விலை குறித்து கேட்டுள்ளனர்
விவசாயிகளை தாக்கிய இளைஞர்கள்
அப்போழுது இளைஞர்கள் விவசாயிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வராமல், வேறு வேலை பார்ப்பத்தாகவும், அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இன்று பெரமாண்டபட்டி பால் உற்பத்தியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பால் விலை முழுமையாக கொடுக்க வேண்டியும், பணிக்கு வராத ஊழியர்களை மாற்ற வலியுறுத்தியும், கேனில் கொண்டு பாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் திடீரென கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள்
அங்கு வந்த காவல் துறையினர் விவசாயிகளிடம் சேசாசுவார்த்தை நடத்தி, ஆட்சியரிடம் மனுஅளிக்க அழைத்து சென்றனர். அப்பொழுது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளை ஏமாற்றும் ஊழியர்களை மாற்ற வேண்டும். இல்லையென்றால், தனியார் நிலையங்களுக்கு பால் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பரபரப்பான நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயிகள் பாலை கீழே கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாலை தனியார் வசம் கொடுக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளடஹு