தருமபுரி மாவட்டத்தில் அரசு மதுபான கடையில் காலி பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கொடுப்பதால், ஊழியர் பற்றாக்குறை இட வசதி இல்லை எனக் கூறி அரசு மதுபான கடை ஊழியர்கள் போராட்டத்தால் திறக்கப்படாத கடைகளில் முன்பு குவிந்த மது பிரியர்கள்.
தருமபுரி மாவட்டத்தில் 64 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடைகளில் நேற்று முதல் காலி பாட்டீல்களை திருப்பி கொடுத்தால், 10 ரூபாய் கொடுக்கப்படும் திட்டம் அமலுக்கு வந்தது. இதில் நாள் ஒன்றுக்கு பாட்டில்களின் மீது, ஸ்டிக்கர் ஒட்டுதல், கலர் மார்க்கரில் அடையாளமிட்டு, விற்பனை செய்து வருகின்றனர். அன்று வாங்குகின்ற மது பாட்டில்களை, அன்றே கொடுத்தால் மட்டுமே பத்து ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மது பாட்டில்களை வழங்குவதற்கு கடையின் நம்பர் குறித்த ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், கலர் மார்க்கரில் அடையாளமிட வேண்டும், பாட்டில்களை வாங்குவதற்கும் தேக்கி வைப்பதற்கு இடவசதி, ஊழியர்கள் வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆள் பற்றாக்குறை, இடவசதி போன்றவற்றை போதிய வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள 64 மதுக்கடைகளையும் திறக்காமல், 500-க்கும் மேற்பட்ட மதுபான கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 12 மணி ஆகியும் மதுக்கடைகள் திறக்காததால், மதுக்கடைகளின் முன்பு மது பிரியர்கள் ஏராளமான குவிந்துள்ளனர். மேலும் மதுக்கடை ஊழியர்கள், காவல் துறையினரிடமும் சில மது பிரியர்கள் கடை திறக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மது அருந்தாமல் வேலைக்கு செல்ல முடியவில்லை, கை, கால் நடுக்கம் போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக மது கடையை திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மது கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்டம் மேலாளர் இடம் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில், உடன்பாடு ஏற்பட்டால், மட்டுமே மது கடைகளை திறப்போம் என ஊழியர்கள் திறக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் மதுக்கடை முன்பு ஏராளமான மது பிரியர்கள் காத்திருந்து வருகின்றனர்.