கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாற்றத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் ரூ.85.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


மு. க. ஸ்டாலின் அறிவித்த நலத்திட்ட உதவிகள்


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிக கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செலுத்தி வருகிறது. 


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்களை மேற்பார்வையிடும் பொருட்டு முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இது நாள் வரை 47.721 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.


 மாதாந்திர பராமரிப்புக்கு 2000 ரூபாய் 


மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40% மனவளர்ச்சி குன்றியோர் நோயினால் பாதிக்கப்பட்டோர். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குணமடைந்தோர் மற்றும் 75 சதவீதத்துக்கு மேல் கை கால் பாதிக்கப்பட்ட மொத்தம் 5,550 மாற்றத்திறனாளிகளுக்கு மாதம் தலா 2000 வீதம் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 



மேலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பணிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உதவி தொகையில் இருந்து இருமடங்காக உயர்த்தி வழங்கி அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாணவர்களுக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பாளர் திட்டத்திலும் 68 லட்சத்தி 99 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண  நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்க நாணயம் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு 11 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேருக்கு தலா எட்டு கிராம் தாலிக்கு தங்கம் நாணயம் வழங்கப்பட்டுள்ளது. 


சுயதொழில் செய்பவர்களுக்கு மானியம்


சுய தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 233 மாற்றுத்திறனாளிகளுக்கு மானியமாக 57 லட்சத்தி 6,620 வழங்கப்பட்டுள்ளது. கால்கள் பாதிக்கப்பட்டு இரு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கப்படுகிறது. 


முதுகுத்தண்டு கைகள் நல்ல நிலையில் உள்ள  என 1894 பேர்களுக்கு தலா 83 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ஒரு கோடியை 57 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் சக்கர நாற்காலிகள் இன்று போல் சிகிச்சை காதொலி கருவி, பார்வையற்றோருக்கு கருப்பு கண்ணாடி, மடக்கு குச்சி ப்ரெய்லி வாட்ச் போன்ற விபரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மொத்தம் 14 லட்சத்தி 93 மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.


கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு சலுகைகள்


18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி செல்பவர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சுயதொழில் புரியும் 100% செவித்திறன் குறைபாடு பார்வை திறன் குறைபாடு உடைய 750 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15,000 மதிப்பில் ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம்  திறன்பேசி வழங்கப்பட்டுள்ளது.


கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.85 கோடியே 47 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.