சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் பெரும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்த போது மக்களை காப்பாற்ற ஒருபைசா கூட நிதி வழங்காமல் ஆட்சி செய்து வருபவர் தான் நம்முடைய பிரதமர் மோடி என தருமபுரியில் சட்டமன்ற துணை தலைவர் கு.பிச்சாண்டி பேசினார்.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழி போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் திருச்சி இராதகிருஸ்ணன் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற துணை தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்று மொழிப்போர் தியாகிகள் குறிதது சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய கு.பிச்சாண்டி, “மொழி போராட்டம் கடந்த 1938 தொடங்கி 1965 வரை மொழிக்காக நமது தோழர்கள் எத்தனை இன்னல்களை சந்தித்தார்கள் என்பதை எண்ணிபார்க்க வேண்டும். உலகத்திலேயே மொழிக்காக தங்களது உயிரை மாய்த்து கொண்டவர்கள் நம் தமிழர்கள். தலைவர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் இந்த மொழி போரில் ஒன்றிய அரசு இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் போதெல்லாம் அதனை எதிர்த்து நின்று அதை மாபெரும் இயக்கமாக மாற்றி அதனை மாணவர் இயக்கமாக உருவாக்கினர். இந்தியாவிலேயே தமிழகம் தான் இந்தியை எதிர்த்ததால் தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மாட்டேன் என முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு வாக்கு உறுதி அளிக்க கூடிய அளவிற்கு உருவாக்கியது நமது திமுக கழகம் தான். அதற்கு பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் தான் முழு காரணம்.
தமிழகத்தில் மொழிக்காக உயிர்நீத்த தீயாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது என்றால் அது நமது முதல்வர் தியாகிகள் மீத வைத்துள்ள மரியாதை தான். தமிழக முதல்வரின் ஆட்சி இன்றைக்கு ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக தமிழக மக்களுக்கு என்ன செய்தது என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக முதல்வராகஇருந்த கலைஞர் இந்தியாவிலேயே யாரும் செய்யாத வகையில் தமிழக விவசாயிகளுக்காக இலவச மின்சாரம் வழங்கினார். அதனால் தான் இன்று விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் போடப்பட்டது. அதனால் தான் இந்தியாவிலேயே வேளாண்மை துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் டாக்டர் கலைஞர் தான் என்றார். ஆனால் சென்னை, துத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் பெரும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்த போது மக்களை காப்பாற்ற ஒருபைசா கூட நிதி வழங்காமல் ஆட்சி செய்து வருபவர் தான் நம்முடைய பிரதமர் மோடி. ஆனால் தமிழக அரசு பெரும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் பாதிக்கபட்ட அந்த பகுதி மக்களை நேரடியாக சந்தித்து ஓடோடி சென்று உதவி செய்தவர் தமிழக முதல்வர்” எனத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, மாணவரனி அமைப்பாளர் பெரியண்ணன் உள்ளிட்ட திமுக அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்த கொண்டனர்.