தருமபுரியில் நடைபெற்ற 75வது குடியரசு தினவிழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கும் அரசு மரியாதையை சுதந்திர போராட்ட தியாகியின் மனைவி புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

நாட்டின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வந்தது. அதனடிப்படையில் தருமபுரியில் 75வது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் சாந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கி அவர்களை கௌவுரவபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற போது மாவட்ட ஆட்சியர் சாந்தி சுதந்திர போராட்ட தியாகியின் மனைவி பார்வதி என்பவருக்கு அரசு சார்பில் வழங்கும் மரியாதையை ஏற்க மறுத்து விட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் மாவட்ட காவல் கண்கரிப்பாளர் ஸ்டீபன் யேசுபாதம் ஆகியோரிடம் புகார் மனுவை கொடுத்தார்.



 

அந்த புகார் மனுவில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி வடிவேல் என்பவரின் மனைவி பார்வதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 67 இலட்சம் ரூபாய் பணத்தை பிரபல தொழிலதிபர் பி.கே.பவுன்ராஜ் என்பவருக்கு கடனாக கொடுத்து அதில் 10 இலட்சம் மட்டும் கொடுத்து விட்டு மீதி பணம் கொடுப்பதாக வாக்குறிதி அளித்தார். தியாகி வடிவேல் இறந்து விட்ட நிலையில் தற்போது பவுன்ராஜ் பணம் திரும்ப கொடுத்து விட்டதாக தெரிவிக்கிறார். இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் கடந்த சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்த நிலையில் தொழிலதிபர் மீது வழக்கு பதிவு மட்டும் செய்து விட்டு இதுவரை எந்த நடவடிக்ககையும் எடுக்கவில்லை. 



 

இந்நிலையில் இன்று குடியரசு தினவிழாவில் தனக்கு அரசு சார்பில் வழங்கும் அரசு மரியாதை ஏற்க மறுத்து விட்டு தன்னை கௌவுரவபடுத்துவது எந்த நியாயமும் இல்லை எனவும், தியாகியின் குடும்பத்திற்கே இந்த நிலமை என்றால் சாதாரண பொது மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்க போகிறது என வேதனையுடன் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுக்க போவதாக பார்வதி தெரிவித்தார். 75வது குடியரசு தினத்தில் தியாகிகளுக்கு வழங்கும் அரசு மரியாதையை தியாகியின் மனைவி புறக்கணித்ததால் மாவட்ட விளையாட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.