கட்சியில் எப்பொழுது, எந்த பதவி கொடுத்தாலும், ஏற்க தயாராக இருக்கிறேன்-பென்னாகரத்தில் தேமுதிக விஜய பிரபாகரன் பேட்டி. 




கேப்டன் பிறந்தநாள் விழா முன்னிட்டு அன்னதானம்


வருகிற ஆகஸ்ட்-25-ம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்றுதல், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 
நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று கலந்து கொண்டார். இதில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இண்டூர், பென்னாகரம் உள்ளிட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி, அன்னதானம் வழங்கினார். இதனை தொடர்ந்து 
பென்னாகரத்தில் விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய விஜய பிரபாகரன், 


பத்திரிக்கையாளர் சந்தித்த விஜய பிரபாகரன்



இன்று தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிக கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, அன்னதானம் வழங்கினேன்‌. மேலும் கட்சி தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.‌ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழ்நாடு முழுவதும் தினம்தோறும் கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டார்கள். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலுமாகவே சரியில்லை. 


நடிகர் விஜய் இன்று தனது கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். அவரவர்கள் விருப்பம்.  விஜய் கட்சி கொடி அறிமுகப்படுத்தியதை வரவேற்கிறேன்.


தொண்டர்கள் என்னை தம்பியாக அழைத்தார்கள் என் அப்பா இருந்து செய்ய வேண்டிய வேலையை நான் செய்கிறேன்


மேலும் தொண்டர்கள் என்னை தம்பியாக அழைத்தார்கள். கட்சி தொண்டர்களின் மரியாதை ஏற்றுத் தான் நான் கட்சிக்கு வந்தேன். இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் காலமானார். தேர்தல் வந்தது, என்னை வேட்பாளராக தேர்வு செய்தார்கள், தேர்தலை சந்தித்தேன். இப்பொழுது தான் எனது அம்மா கட்சியின் தலைவராக, கட்சி பொறுப்புக்கு வந்திருக்கிறார். எனக்கு கட்சி பொறுப்பு வழங்குவது குறித்து கட்சியின் தலைவர், மூத்த நகர்வாகிகள் என கட்சி தலைமை தான், சேர்ந்து முடிவு எடுப்பார்கள். நான் அரசியலுக்கு வர மாட்டேன், பதவி வேண்டாம் என்ற போலி பேச்சு எல்லாம் எனக்கு பேச தெரியாது. கட்சி தொண்டார்கள் அழைத்தார்கள் வந்தேன், எனக்கு எந்த நேரத்தில், கட்சியில் எந்த பொறுப்பு வழங்கினாலும் அதனை உடனே ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.


கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு தெரியும்.  எனக்கு எப்பொழுது கட்சியில் பதவி தர வேண்டும் என்று.  பொறுப்புக்காக என்றும் தயாராக இருக்கிறேன். இப்பொழுது கட்சியின் தொண்டனாக கேப்டன் விஜயகாந்தின் மகனாக கட்சி பிரமுகர்கள் அழைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். 


விஜய் அண்ணா எங்க வீட்டுக்கு வந்தார்


விஜய் எங்கள் வீட்டிற்கு வந்த போது கோட் படம் தொடர்பாகத்தான் பேச வந்தார்.  கட்சி பற்றியோ அரசியல் பற்றியோ நிங்கள் ஏதும் பேசவில்லை. விஜயகாந்த் மீது வைத்துள்ள மரியாதைக்காக, விஜய் எங்களை சந்திக்க வந்தார் என தெரிவித்தார்.