உலக உயிரினங்களில் மிகவும் சிறியது கொசு ஆனால் அது ஏற்படுத்தும் நோய் பாதிப்புகள் மிகப்பெரிய மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்று உயிரை பறிக்கும் பல நோய்கள் கொசுக்களின் மூலமாகவே பரவுகிறது என்று நாம் கூறி விட முடியாது.
இந்தியாவில் 4.151 வகையான கொசு இடங்கள் உள்ளன
உலக அளவில் இந்தியாவில் பல்வேறு வகையான கொசுக்கள் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 4.151 கொசு இனங்கள் உள்ளன. இங்கு கொசுக்கள் பரவும் நோய்களால் ஆண்டுக்கு 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
எனவே அபாய கொசுக்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ஆம் தேதி உலக கொசு தினம் அனுசரிக்கப்படுகிறது. பெண் கொசுவே மலேரியாவை பரப்புகிறது 1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி பிரிட்டிசை சேர்ந்த மருத்துவர் சர்ணல்ட் ரோஸ் கண்டுபிடித்தார்.
நினைவாக உலக கொசுவையொட்டி மருத்துவர்கள் கொசுக்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நோயியல் துறை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:-
கொசுக்கள் பல்வேறு நோய்களை மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதில் மிகவும் அபாயமானது மலேரியா பாதிப்பு இதே கொசுக்கள் கடிக்கும் போது நமது உடலில் நுழையும் ஒட்டுண்ணிகளால் உருவாகிறது. இந்த ஒட்டுண்ணியானது ரத்த ஓட்டத்தில் நுழைந்து விட்டால் உயிருக்கே ஆபத்தாக அமைகிறது. உலக அளவில் ஆண்டு தோறும் மலேரியா வில் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் 2.10 பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேரியா நோய்கள் ஏற்பட அறிகுறிகள்
மலேரியாவை பொருத்தவரை முதலில் சாதாரண காய்ச்சலின் அறிகுறிகள் போன்றே இருக்கும் குளிர்ச்சியுடன் கூடிய காய்ச்சல், தலைவலி மற்றும் தசை வலி, நெஞ்சு வலி, சோர்வு, இருமல், சுவாச பிரச்சனை வாந்தி வயிற்றுப்போக்கு குமட்டல், போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.
மலேரியா தொற்று ஏற்பட 10 முதல் 30 நாட்களுக்கு பிறகு இது போன்ற அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். மலேரியா ஒட்டுண்ணி ஆண்டுகள் உடலில் தங்கி இருக்கும் தன்மையைக் கொண்டது. எனவே எந்த நிலையிலும் கொசுக்களின் க டியிலிருந்து முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
மழைக்காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
நமது நாட்டைப் பொறுத்தவரை மழைக்காலம் தொடங்கியதும் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து விடும். அது தவிர்க்க கிருமிகளை பயன்படுத்துவது, வீட்டிற்குள் கொசுவிரட்டும் சாதனங்களை பயன்படுத்துவது, கொசுக்கள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்க ஜன்னல் திரைகளில் வலைகளை பயன்படுத்துவது போன்ற வழிமுறைகளை கடைபிடிக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்த வேண்டும். கொசுக்களை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். பொதுவாக பகல் நேரத்தில் கொசுக்கள் மனிதர்களை அதிகம் கடிப்பதில்லை.
அதேபோல் பல்வேறு கொசுக்கள் கடிப்பதாலும் மலேரியா உருவானாலும் எல்லா நேரங்களிலும் கொசுக்களின் பிடியில் இருந்து நமது உடலை பாதுகாப்பதற்கான முயற்சிகளை பாதுகாப்பது சிறந்த வழியாக அமையும் இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாதிப்பு நாடுகள் பட்டியலில் இந்தியா
உலக அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மலேரியா பாதிப்புகள் காணப்படுகிறது. வெப்ப மண்டல பகுதிகளில் மலேரியாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. உலக அளவில் அமெரிக்கா பாதிப்புகளில் 70% 11 நாடுகளில் உள்ளது. இதில் ஒரு நாடாக இந்தியாவும் இடம் பெற்று அதேபோல் ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிக அளவில் மலேரியா பாதிப்புகள் உள்ளது.
மலேரியா கட்டுக்குள் இருக்கிறது கிரேக்க நாட்டில் 1972 களிலேயே மலேரியா முற்றிலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்புகளின் கூற்றுப்படி கொசுக்கள் குறித்து விழிப்புணர்வு தினம் என்பது பயனை கொண்டுள்ளது. முந்தைய காலகட்டங்களில் மலேரியா உயிரிழப்புகள் 30 லட்சம் ஆக 1995 முதல் இது படிப்படியாக குறைந்து இப்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 4.35 லட்சம் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.