கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகே உள்ள ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருகின்றது. இதனால் குடோனைச் சுற்றியும் குடோனுக்கு மேலேயும் பல மீட்டர்கள் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துவருகின்றனர். குடோனுக்குள் ஆட்கள் யாரேனும் உள்ளார்களா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. முதற்கட்ட விசாரணையில் தீவிபத்துக்குள்ளான குடோன் வடிவேலு என்பவருக்குச் சொந்தமானது என தெரிவந்துள்ளது. 


ஓசூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட   தீ விபத்தால்  பல லட்சம்  மதிப்பிலான பட்டாசுகள் ஏரிந்து சேதமானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜிமங்கலம் கிராமத்தில் வடிவேல் என்பவர்  கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு குடோன் வைத்துள்ளோர். இங்கிருந்து ஓசூரில்  உள்ள  பட்டாசு கடைகளுக்கு  அவ்வப்போது  பட்டாசுகளை கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று  மாலை  5 மணிக்கு வடிவேலுக்கு சொந்தமான  பட்டாசு குடோனில் திடிர் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறி   அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. இது குறித்து தகவல் அறிந்த  ஓசூர் தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் தண்ணீர்  கொண்டு வந்து  15 க்கும்மேற்பட்டோர் தீயை அணைக்க முயன்றனர்.


ஆனால்  பட்டாசு வெடித்து கரும்புகை சூழ்ந்ததால் தீயை அணைக்க முடியாமல்     தண்ணீரை பீய்ச்சியடித்து படிப்படியாக  தீயை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இந்த குடோனில் பணியாளர்கள்  மற்றும் அருகே குடியிருப்புகள் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.  மேலும்   அந்த வழியாக பொதுமக்கள் செல்லாமல்  டிஎஸ்பி பாபுபிரசாத் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த  தீ விபத்தால்  பல லட்சம் பட்டாசுகள் எரிந்து சேதமானது. மேலும்  தீ விபத்து குறித்து பாகலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.