தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில் அரசு துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்


மழைக்காலங்களில் ஒகேனக்கல் காவிரி உபநீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு பம்பிங் செய்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைத்திருக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.


தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக விவசாய சங்க மாநில தலைவர் எஸ். ஏ. சின்னசாமி பேசியபோது:-


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு பம்பிங் செய்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பருவ மழை பெய்யாமல் வேலையில்லாமல் பஞ்சம் பிழைக்க பெங்களூருக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். அங்கு காவிரி பிரச்சனைகளால் தாக்கப்பட்டு சொந்த ஊருக்கு விவசாயிகள் திரும்பும் நிலை உள்ளது.


இந்த நிலை மாற ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை அரசு  செயல்படுத்தினால் சொந்த ஊரிலேயே விவசாயம் கவனித்துக் கொண்டு விவசாயிகள் குடும்பத்துடன் இருக்கும் நிலை ஏற்படும்.


ஈச்சம்பாடி அணைக்கட்டில் பம்பிங் மூலம் சுற்றுவட்டார ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நிரப்பும் திட்டம் செயல்படுத்த வேண்டும். தும்மலஹள்ளி என்னை கொள் புதூர் நீர் பாசன திட்டம், அழியாளம், தூள் செட்டி ஏரி நீர் பாசன திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.


அரசு மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரதாபன் தர்மபுரி மாவட்ட வனம் மற்றும் மலையை சார்ந்த பகுதியில் அதிகமாக கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. மாவட்டத்தில் காவிரி வடக்கு, தெற்கு வன உயிர் இன சரணாலயங்கள் உள்ளன. இங்கு கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


வனவிலங்குகளிடமிருந்து கால்நடைகளுக்கும், கால்நடை இடம் இருந்து வனவிலங்குகளுக்கும் பரவும் நோயை கட்டுப்படுத்தவும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதும் அவசியமாகிறது. இதனால் சரணாலய பகுதிகளில் கால்நடைகளிடம் கால்நடைகளின் நடமாட்டம் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு புறம்பாக உள்ளதால் அவற்றை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வரும் 1- ம் தேதி முதல் கால்நடைகளை சரணாலய பகுதிகளில் கண்டறியப்பட்டால் அவற்றை பிடித்து அரசுடைமையாக்கப்படும். பின்னர் அவற்றை பொது இடத்தில் விற்பனை செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த வார்த்தையை உடனே வனத்துறை திரும்ப பெற வேண்டும்.


 விவசாயிகள் கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி பதிலளித்து பேசுகையில்:-


தமிழக முதல்வர் விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வனத்தில் கால்நடைகள் மேச்சலுக்கு மற்றும் நடைபயிற்சி பறிமுதல் குறித்து விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் தனியாக விவசாயிகளை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி கலந்து பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒகேனக்கல் காவிரி உபநீர் திட்டம் அரசு பார்வையில் உள்ளது. நீர்ப்பாசன திட்டங்கள் விரைவாக  செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட  மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.