கடந்த ஆண்டு பருவ மழை பொழித்து போனதாலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து முற்றிலுமாக இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மாந்தோறும் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்காமல் நிறுத்தப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்த ஆண்டு நீர்வரத்து கடுமையாக சரிந்து வெறும் பாறைகளாகவே காட்சியளித்து வந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, தேன்கணிகோட்டை, தளி உள்ளிட்ட, தமிழக, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை குறைந்தால் நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. 



 இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 3000 கன அடி வரை உயர்ந்தது. மேலும் நீர்வரத்து உயர்வதும், குறைவதும் என மாறி, மாறி இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால்  காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடி வரை உயர்ந்த நீர்வரத்து, வினாடிக்கு 2000, 1500 கன அடி என படிபடியாக குறையத் தொடங்கியது. 


இதனால் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியாக குறைந்தது. மேலும் நீர்வரத்து குறைந்து இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து 500 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தொடர்ந்து நீரவரத்து சரிந்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்புள்ளது என சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மே ஜூன் மாதங்களிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கி கர்நாடக அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கி இருந்தாலும் அதிக அளவில் புரியவில்லை இதனால் கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் காவிரி ஆணையம் தமிழகத்திற்கு 15 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்திரவிட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்தால் மட்டுமே, தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது என நீர்வள துறையினர் தெரிவிக்கின்றனர்.