ஓசூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வேட்டையாடுவதை கட்டுப்படுத்தவும் வகையில் கள்ள நாட்டு துப்பாக்கிகளை வைத்து இருப்பவர்கள் வரும் ஜூலை 17-ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிகுறித்துள்ளனர். 


 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டமானது 1492 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.  மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 29 சதவீதம் வனப்பகுதி உள்ளது.  இங்கு வாழும் அதிக அளவிலான அரிய வகை உயிரினங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 54 சதுர மீட்டர் பரப்பளவில் 2014ஆம் ஆண்டு காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் 686 சதுர கிலோமீட்டர் கிருஷ்ணகிரி மாவட்டம் 477.82 சதுர கிலோமீட்டர், தர்மபுரி மாவட்டம் 28.58 சதுர கிலோமீட்டர், பரப்பளவில் 2020ஆம் ஆண்டு காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமும் அறிவிக்கை  செயல்படுத்தப்பட்டு வருகிறது.


ஒசூர் வனக்கோட்டமானது காவேரி, சின்னாறு, தென் பண்ணையாறு, போன்ற ஆறுகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக அமைந்துள்ளது.  இப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் மயில்கள் உட்பட இதர பறவை இனங்கள் அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன.  வனப் பகுதிகளில் உள்ள உயிரினங்கள் அவ்வப்போது வேட்டையாடப்படுகின்றன. 


 வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மலை கிராமங்கள் மற்றும் காப்புக்காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகம், பேனர்கள் மூலம் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாகவும், பேரணிகள் நடத்தப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 


 இதனை அடுத்து 111 கள்ள நாட்டு துப்பாக்கிகளை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைத்தனர்.  அவை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனால் வனப்பகுதியில் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது வன உயிரினங்கள் வேட்டையாடுதல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இதனிடையே விவசாய நிலங்களில் பயிர்களை உண்பதற்கு வரும் யானைகள் கள்ள நாட்டு துப்பாக்கிகள் மூலம் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.  இது தொடர்பாக வன அலுவலர் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 14 கள்ள நாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு வன உயிரின குற்றங்கள் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  


வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு வனங்களை சார்ந்து உள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் யாரேனும் கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தால் அதனை வரும் 17ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 17ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலர்களை தொடர்புகொண்டு அவர்களிடமோ அல்லது ஊர் முக்கியஸ்தர்களிடமோ தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு கள்ள நாட்டு துப்பாக்கிகள் ஒப்படைக்கும் நபர்கள் மீது வன குற்ற வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாது. 


 அவ்வாறு ஒப்படைக்காமல் கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருக்கும் பட்சத்தில் வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு மோப்ப நாய்கள் மூலம் மலை கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ரோந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


இச்சோதனை மூலமோ அல்லது வேறு ஏதும் வகையிலோ கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும்  ஆயுத தடைச் சட்ட பிரிவுகளின் மூலம் காவல்துறையால் இந்திய தண்டனைச் சட்டம் மூலமும் வனத்துறையாலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.