தருமபுரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ ராகி வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 80 ரேஷன் கடைகள் மூலம் 4.65 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கப்படுகிறது. இதில் மாதம் தோறும் 575 டன் ராகி தருமபுரி மாவட்டத்திற்கு தேவைப்படுகிறது.


இதற்காக இந்திய உணவுக் கழகத்தின் மூலம் ராகி கொள்முதல் செய்யப்படுகிறது. தருமபுரி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ராகி கொள்முதல் செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் மூலம் ராகி வினியோகம் செய்யப்படுவதால், தருமபுரி மாவட்டத்தில் ராகி சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதனால் ராகியின் விலையும் உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 225 டன் ராகியை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளனர்.


தருமபுரி மாவட்டத்தில் 1500 ஏக்கரில் ராகி சாகுபடி செய்யப்பட்டு, தேவையான அளவு ராகி விளைகிறது. தற்போது ஒரு கிலோ ராகி 38, 46க்கு விற்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4.65 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக ஒரு குடும்பத்திற்கு அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கப்படுகிறது. இதற்காக தருமபுரி மதிகொன்பாளையம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பென்னாகரம் அடுத்த வண்ணத்துப்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிடம் வளாகம் அரூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகிய மூன்று இடங்களிலும் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாய இடம் இருந்து ராகி கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் ஆண் ஆகஸ்ட் மாதம் வரை ராகி கொள்முதல் செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் ராகி அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ள விவசாயிகள் மற்றும் ராகி இருப்பு  வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறுகுறி விவசாயிகள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சிட்டா, அடங்கள், வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம்.


மேலும் அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு 38, 46   என்ற அடிப்படையில் தங்களது வங்கிக் கணக்கில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு செலுத்தப்படும். நேரடி கொள்முதல் நிலையங்கள் மாலை 9.30 மணி முதல் 1:30 மணி வரை மாலை இரண்டு முப்பது மணி முதல் 6:30 மணி வரையிலும் செயல்படும் நேரடி ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால், மண்டல மேலாளரை 944393803 என்ற எண்ணிலும், மண்டல அலுவலகத்தை 04342-231345 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கடந்த டிசம்பர் மாதம் துவங்கி வரும் ஆகஸ்ட் மாதம் வரை ராகி கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களில் 225 டன் ராகி தர்மபுரி மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாதம் 575 டன் ராகி தேவைப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்தார்.