நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுகவைச் சார்ந்த தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதில் தினமும் ஒவ்வொரு தொகுதிகளில், ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஊர் ஊராக குடுகுடுப்பை வேடம் அணிந்து கொண்டு, திமுக சார்பில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார் என மக்கள் மத்தியில் குடுகுடுப்பை அடித்துக் கொண்டு குறி சொல்வது போல பிரச்சாரம் செய்து வருகிறார்.



 

இந்நிலையில் நேற்று  பாப்பிரெட்டிபகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் குடுகுடுப்பைக்காரர் போன்று வேடம் அணிந்து கொண்டு, இந்த தருமபுரி தொகுதியில் திமுக வெற்றி பெறும், ஸ்டாலின் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என ஜக்கம்மா சொல்கிறார், என குடுகுடுப்பை ஆட்டிக்கொண்டு பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன்,  குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு வீதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மோடி பிரதமர் ஆன பிறகு நீட் தேர்வை கொண்டு வந்து நம் பிள்ளைகளின் மருத்துவக் கனவை சீரழித்துள்ளார். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை இரண்டாயிரத்து தாண்டும். இந்த அரசால், பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு, ஜிஎஸ்டி வரியால் மக்கள் படும் அவதி குறித்து குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். 



 

அப்போது அங்கே இருந்த பெண்கள் முதலில் ஒயின் ஷாப்பை மூட சொல்லுங்க, இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர். ஆனால் தமிழக இளைஞர்களுக்கு படித்த ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது. எனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துங்க. இதெல்லாம் ஏற்படுத்தி கொடுங்க நாங்க ஓட்டு போடுகிறோம் என ஜக்கம்மா கோவிந்தனிடம் பல்வேறு கேள்விகளை பெண்கள் சராமரியாக கேட்டனர். இதனால் பெண்களிடம் பதில் சொல்ல முடியாமல் தலைமை கழக பேச்சாளர்கள் தென்னரினார். அப்போது அங்கு இருந்த திமுக நிர்வாகி ஒருவர் டைம் ஆச்சு அடுத்து ஏரியாவுக்கு  கிளம்பலாம் என கூட்டத்துடன் தப்பித்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.