தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட வனச்சரங்களில் ஏராளமான யானை, புள்ளிமான், காட்டுப் பன்றி, மயில்  உள்ளிட்ட வன விலங்குகள் இருந்து வருகின்றன.


மேலும் வனவிலங்குகளின் உணவு தேவைக்காக வனப் பகுதியிலேயே குளம், குட்டைகள் அமைத்து தண்ணீர் நிரப்பியும், தீவன தட்டுகள் போன்றவைகளை பயிரிட்டு, வனத் துறையினர் வளர்த்து வருகின்றனர்.


ஆனால் கோடை காலங்களில் மழை இல்லை என்றால்,  வனப் பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்படும். இதனால் வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் தங்களுக்கு தேவையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் வனப் பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள், வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைவது வழக்கம். 


இந்நிலையில் அரூர் அடுத்த கோட்டப்பட்டி வனச் சரகத்தில் சிட்லிங் மலை முழுவதும் வனப் பகுதியைக் கொண்டது. இந்நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி நான்கு வயதுள்ள ஆண் புள்ளிமான் ஒன்று ஏ.கே.தண்டா கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. அந்த புள்ளிமானை கண்ட தெரு நாய்கள், அதனை துரத்தி, பல்வேறு இடங்களில் கடித்து இழுத்துள்ளது. இதில் புள்ளிமானுக்கு வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.


இதனை தொடர்ந்து நாய்கள், புள்ளி மானை கடித்து இழுத்ததில், வயிறு கிழிந்த நிலையில் உள்ளிருந்த உறுப்புகள் அனைத்தும் வெளியில் தொங்கியது. இதனைக் கண்ட கிராம மக்கள் நாய்களை துரத்தி விட்டு பார்த்தபோது, மான் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளது. இதனனயடுத்து கோட்டப்பட்டி வனத் துறை துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர், புள்ளி மான் உடலை ஆய்வு செய்தனர்.


இதனை தொடர்ந்து சிட்லிங் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து, சம்பவ இடத்திலேயே புள்ளி மான் உடலை பிரேத பரிசோதனை செய்து, அருகில் உள்ள வனப் பகுதியிலேயே உடலை நல்லடக்கம் செய்தனர். மேலும் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த புள்ளி மானை நாய்கள் கடித்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனப் பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியே வருவதை தடுப்பதற்கு, வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்