தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், சமையல் செய்யும்  பொறுப்பாளர்களுக்கு, கேஸ் மூலம் ஏற்படும் விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு பயிற்சி நடைபெற்றது.


இந்த பயிற்சி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார மகளிர் திட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கு பயிற்சிக்கு மகளிர் திட்ட அலுவலர் பத்ஹூ முகமது நசீர் கலந்து கொண்டு, கேஸ் சிலிண்டர், மற்றும் அடுப்பு வைத்து, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், கேஸ் அடுப்பு மூலம் குழந்தைகளுக்கு சமைத்து வழங்கப்படும் உணவு தயாரிப்பின் போது, கேஸ் அடுப்பை எவ்வாறு சமையளர்கள் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என, செயல்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர். மேலும் விபத்து ஏற்பட்டால் அதனை உடனடியாக தடுக்கும் சுலபமான வழிமுறைகள் பற்றி விரிவாக எடுத்து கூறினார். 


இதனை தொடர்ந்து சமையலர்களை அழைத்து, பயிற்சியில் தெரிந்து கொண்டது போல், கேஸ் சிலிண்டரில் அடுப்பை பற்ற வைத்து செயல்முறை விளக்கம் செய்து காட்ட வைத்தார். அப்போது சரியாக செய்யாதவர்களுக்கு, எப்படி பாதுகாப்பாக செய்ய வேண்டும் என செய்து காட்டி பயற்சி கொடுத்தார்.


மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று அல்லது நான்கு சமையலர்கள் உள்ளனர். இதில் பணியாற்றும் எல்லோரும், கேஸ் இணைப்பை பொருத்தவும், அதனை பாதுகாப்பாக கையாளவும், கட்டாயம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதேபோல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், அதனை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டால் அதனை உடனடியாக தடுக்கும் சுலபமான முறையினை எல்லோரும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


அப்பொழுது தான் விபத்துகளை தடுக்க முடியும். ஏனென்றால், பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என சமையல் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கி பேசினார். மேலும் இந்த பயிற்சி வகுப்பு தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பணியாற்றும் சமையலர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 



இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி லோகநாதன், மகளிர் உதவி திட்ட அலுவலர் வெற்றிச்செல்வன், இண்டன் கேஸ் மேலாளர் வில்சன், பணியாளர்கள் மற்றும் நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பணியாற்றும் சமையலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.