தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த தாசம்பட்டி, அரசு உயர் நிலைப் பள்ளி முன்பு, 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்துள்ளான். இதனை கண்ட கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து, பென்னாகரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பென்னாகரம் காவல் துறையினர், சிறுவனின் சடலத்தை ஆய்வு செய்தனர். அதில் கற்களோ அல்லது வேறு  ஏதேனும் பலமான ஆயுதம் கொண்டு தாக்கி, முகம் சிதைக்கப்பட்டு இருப்பதை தெரியவந்தது. மேலும் உடலில் வேறு எங்கேனும் காயங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். இதனையடுத்து சிறுவன் யார்? விவரம் என்னவென்று விசாரணை நடத்தினர்.


அந்த விசாரணையில், மர்மமான முறையில் சடலமாக கிடந்த சிறுவன், பென்னாகரம் அருகே உள்ள பண்டஅள்ளி அடுத்த திப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாள் மற்றும் குமுதா ஆகிய தம்பதியினரின் மூத்த மகன் யாதவன் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து  சிறுவனை யாரோ அடித்து கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் மர்ம மரணம் குறித்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தினர்.


இதனை தொடர்ந்து யாதவன் தாயிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.  கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, பெற்றோர் பெருமாள் குமுதா ஆகியோர் கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குமுதா கோபித்துக் கொண்டு, தனது தாய் வழியில் உறவினர் வீடான தாசம்பட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தனது பாட்டி வீட்டில் இருந்த யாதவன், திப்பட்டிக்குச் சென்று தனது தந்தையை பார்த்து  விட்டு வருவதாக கூறி சென்றதாகவும், மறுநாள் காலை தாசம்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளி அருகே மர்மமான முறையில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளனர்.  


இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை பெருமாளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது நான் இளைய மகனை வால்பாறைக்கு அழைத்து சென்றதாகவும், விடியற்காலைதான் வந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் காவல் துறையினருக்கு சிறுவனின் தந்தை மீது சந்தேகம் வலுத்துள்ளது. இதனில் தோண்டி, தோண்டி கேள்வி கேட்டுள்ளனர். அப்பொழுது முன்னுக்கு பின் முரணாக பேசி வந்துள்ளார்.


தொடர்ந்து நடத்திய விசாரணையில், வால்பாறையில் இருந்து வந்து பார்த்தப் போது, வீட்டில் யாதவன் மட்டுமே இருந்துள்ளான். அவனிடம் தாய் குறித்து கேட்டபோது, நாசம் பட்டியில் இருப்பதாக தெரிவித்தான். மேலும் விடியற்காலை, இருவரும் அழைத்தேன் சென்றபோது, பாதி வழியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பெருமாள், கல்லெடுத்து எறிந்ததில், சிறுவன் முகத்தில் பட்டு, மயங்கி விழுந்துள்ளான்.


இதனால் யாதவன் இறந்ததாக எண்ணிய பெருமாள், யாதவன் முகத்தின் மீது பெரிய கல்லை தூக்கி போட்டுவிட்டு சென்றதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து மகனை கொலை செய்த, தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தந்தை மகனுக்கு ஏற்பட்ட தகராறில், மகளை கல்லை தூக்கி போட்டு, தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.