தர்மபுரி அடுத்த கே.நடுஹள்ளியை சேர்ந்த விவசாயி திருநாதன் 66 இவர் அவருக்கு சொந்தமான 3  விவசாய நிலத்தில் சிறுதானிய பயிரான தினை விவசாயம் செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்; 


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேளாண் துறை அதிகாரி ஆலோசனைப்படி சிறுதானிய பயிரான தினை பயிரிட முடிவு செய்து 3 ஏக்கர் பரப்பளவில் திணை விதைப்பு செய்தேன். இதில் முதல் ஆண்டிலேயே மூன்று டன் அளவிற்கு மகசூல் கிடைத்தது.  திணை விவசாயத்தில் உரம் பூச்சிக்கொல்லி உள்ளிட்ட எதுவும் தேவைப்படாததால் செலவுகள் மிகவும் குறைவு வருமானம் அதிகமாக கிடைத்தது. என்னிடம் மொத்த விற்பனையாளர்கள் கிலோ 55 ரூபாய் என்ற அளவில் வாங்கி சென்றனர். தற்போது கடைகளில் விதைப்பதற்கு வாங்கும் திணை எழுவது ரூபாய் வரை விற்பனையாகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு மீண்டும் அதே பரப்பளவில் தினை விதைத்தேன். 


எதிர்பார்த்த அளவு நல்ல மகசூல் கிடைத்தது அதுசமயம் வேளாண் துறை சார்பில் அதிக அளவு திணை விவசாயம் செய்த விவசாயியாக தேர்ந்தெடுத்தனர்.


பிறகு கடந்தாண்டு ஐப்பசி மாதத்தில் மழை குறைவால் மீண்டும் விவசாயம் எதுவும் செய்யவில்லை. கடுமையான வரட்சியை தொடர்ந்து கடந்த மே 4க்கு பிறகு மாவட்டத்தில் தொடர்ந்து அவ்வப்போது கனமழை பெய்தது. இதில் கடந்தாண்டு பயிரிட்ட தினை அறுவடை செய்யும்போது, மகசூல்  அதிக அளவில் நிலத்தில் சிதறியது. அவை அனைத்தும் மீண்டும் மழையின் காரணமாக முளைத்திருந்தது. அதனை அப்படியே களை எடுத்து விட்ட பின், தொடர் மழையால் இப்போது மூன்று மாதத்தில் மற்ற இரண்டு ஆண்டுகளை காட்டிலும் அதிக மகசூலுடன் விளைந்து நிற்கிறது. 


தினை வருடம் முழுவதும் விவசாயம் செய்வதற்கு ஏற்ற பயிராக உள்ளது. மேலும் கடந்த 11 அன்று தமிழக முதல்வர் தர்மபுரி வந்திருந்த போது சிறந்த தினை விவசாயி என்பதற்காக இரண்டு புள்ளி 50 லட்சம் ரூபாய் காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.


 இதில் பெரிய அளவில் எந்தவித செலவு இன்றி அதிக லாபம் பார்க்கக் கூடிய பயிராக தினை உள்ளது. இந்த திணையை தற்பொழுது அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் இந்த திணை உணவு உண்பதால் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் உடல் பருமன் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது எனவே மக்கள் பழங்காலத்து உணவை தேடி உண்டு வருகின்றனர் இந்த நாள் திணைக்கு அதிக அளவில் மக்களிடத்தில் வரவேற்பு உள்ளது. 


 எங்கள் வீட்டிலும் உணவாக திணையை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.எனது வீட்டு தேவைக்கு போக மற்றவற்றை மொத்த விற்பனையாளர்களிடம் விற்பனை செய்து விடுகிறேன். அந்தத் திணையின் மூலம் எனக்கு முதல்வர் அவர்களால் நல்ல உழவன் விருது கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.