தருமபுரி அருகே கால்வாய் வெட்டுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஜிம் மாஸ்டரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தருமபுரி அடுத்த எட்டிமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (26) என்பவருக்கு திருமணம் முடிந்து 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் பிரகாஷ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே பாரதிபுரத்தில் ஜிம் பார்லர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது உறவினர் வெங்கடேஷ் (36) என்பவர் அருகருகே வீடுகள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்றுள்ளது. அப்பொழுது இருவருக்கும் இடையே கழிவுநீர் கால்வாய் அமைப்பதில், கடந்த இரண்டு மாதமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த இருவருக்கும் இடையில் சுடுகாடு செல்வதற்கான பாதையிலும் பிரச்சனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக சுடுகாடு மற்றும் கழிவுநீர் கால்வாய் ஏற்பட்ட தகராறு இருந்து வந்த நிலையில் இன்று குடிபோதையில் இருந்த வெங்கடேஷ், பிரகாசின் மனைவியிடம் வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரகாசின் மனைவி தொலைபேசியில் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரகாஷ், வெங்கடேசிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வெங்கடேஷ் மறைத்து வைத்திருந்த காய்கறிகள் வெட்டும் கத்தியால் சராமரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். அப்போது தடுக்க வந்த பிரகாஷின் மனைவிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.



 

அதனையடுத்து அங்கிருந்த பொது மக்கள் மற்றும் உறவினர்கள் படுகாயமடைந்த பிரகாசை மீட்டு, ஆட்டோவில் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனையடுத்து பிரகாசின் உடலை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தலைமறைவான கொலை குற்றவாளியை கைது செய்ய வழியுறுத்தி தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் பிரகாசின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கைது செய்வதாக உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வெங்கடேஷை மதிகோண்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில், ஜிம் மாஸ்டரை கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.