ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஒகேனக்கல்லில் நடைபெறும் மூன்று நாள் ஆடி பெருக்கு விழாவில், கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்க துறை அலுவலர்கள் முனைப்பு காட்ட வேண்டும்-மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தல்.

Continues below advertisement

ஒகேனக்கல்லில் நடைபெறும் மூன்று நாள் ஆடி பெருக்கு விழாவில், கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்க துறை அலுவலர்கள் முனைப்பு காட்ட வேண்டும்-மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தல்.

Continues below advertisement

தருமபுரி மாவட்ட ஒகேனக்கல் சுற்றுலாத் தளம்  மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகும். இங்கு ஆடி மற்றும் புரட்டாசி மாத அமாவாசை உள்ளிட்ட நாட்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  பெரியவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும். புதிதாக திருமணமான பெண்கள் காவிரி ஆற்றில் பனித நீரிடி  புத்தாடை  அணிவது மற்றும் அனைவரும் இந்த ஆடி மாதத்தில் ஒகேனக்கல் ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். 

இந்த புனித நீராடுவதற்காக தருமபுரி மாவட்டம் மட்டுமில்லாமல், சேலம், நாமக்கல், ஈரோடு,  தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமானோர் இங்கு வந்து நீராடி செல்வர்.  கர்நாடகா கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த ஆடி மாதத்தில் வந்து நீராடுவார்கள் அந்த வகையில் ஆடிப்பெருக்கு விழா மாவட்ட நிர்வாகம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.


ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் இந்த வருடம் மூன்று நாட்கள் மிகவும் விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை கூட்டத்தில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில்  கூட்டத்தில் மாவட்ட பேசியதாவது, 
ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா வரும் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை மூன்று நாட்கள் கொண்டாடப்படும். தமிழக அரசின் உத்தரையின்படி ஒகேனக்கலில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்  அலுவலர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே தமிழ்நாடு அரசின்  சாதனை விளக்க கண்காட்சி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த விழா  நடைபெறும் மூன்று நாட்களுக்கும் கலை பண்பாட்டுத் துறை, சார்பில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், என அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். மற்றும் பள்ளி கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் சுற்றுலாத் துறை மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடத்தப்பட வேண்டும். ஆடிப்பெருக்கு விழாவின் போது சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார ஏற்பாடுகள், தடை இல்லாமல் மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல், கூடுதல் போக்குவரத்து வசதிகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தேவையான முன்னேற்பாடுகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்.  

 

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸிசி ராஜ்குமார், ஆட்சகயரின் நேர்முக உதவியாளர் பொது சையது மொய்தீன் மோகன் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola