கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சின்ன பருகூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (45) கல் உடைக்கும் தொழிலாளி இவரது மனைவி உஷா (37) இவர்களது மகள்கள் நிவேதா (17) ஷர்மிளா (13) இவர்கள் இருவரும் பர்கூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பயின்று வந்தனர்.
இந்நிலையில் ரமேஷுக்கு போதிய வருவாய் இல்லாததால் குடும்பத்தினர் கடன் பிரச்சனையில் அவதிப்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக மகளிர் சுய உதவி குழுவில் நேற்று 19-ஆம் தேதி ஐந்தாயிரம் பணம் கட்ட வேண்டிய நிலையில் பலரிடம் கடன் கேட்டுள்ளனர்.
எங்கும் கிடைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் அடிக்கடி இருவர்களுக்குள் குடும்பத்தகராரும் இருந்து வந்துள்ளது.
இதை அடுத்து ரமேஷ் பெங்களூரில் உள்ள தனது தம்பி கணேசனை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் அதிக கூச்சல் இருந்ததால் அவர் போனை துண்டித்துள்ளார்.
இது குறித்து பர்கூரில் உள்ள தனது தந்தை காத்தவராயனை தொடர்பு கொண்டு கணேசன் அண்ணன் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போது காத்தவராயன் ரமேஷை தொடர்பு கொண்டு பேசிய போது எனக்கு வாழவே பிடிக்கவில்லை நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் எனக்கூறி போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். பின்னர் அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பணம் ஏதும் கிடைக்குமா என கேட்க சென்று விட்டார்.
மகன் தற்கொலை செய்யப் போவதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த காத்தவராயன் உடனடியாக மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிற்குள் மருமகள் உஷா பேத்திகள் நிவேதா, ஷர்மிளா ஆகியோர் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கடந்துள்ளனர்.
கதறி அழுத காத்தவராயன் பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ் பி. தங்கதுரை, பர்கூர் டிஎஸ்பி பிரித்திவிராஜ் சவுகான், பர்கூர் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு மாயமான ரமேஷை போலீசார் நேற்று மதியம் கண்டுபிடித்து அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
சம்பவம் குறித்து எஸ்பி இடம் கேட்டபோது "முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு உஷா தனது மகளுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது