கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளமாநிலம் வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 


கன மழை காரணமாக, கர் நாடக மாநிலத்திலுள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக் கான நீர் வரத்து அதிகரித் துள்ளது. 


கபினி அணை நிரம்பியதால், பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வரு கிறது. கபினி அணையில் இருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 


மேலும், கிருஷ்ணராஜ் சாகர் அணையில் இருந்து 15,748 கனஅடி நீரும் என மொத்தம் 25,748 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் உப ரிநீர் திறப்பு  காரணமாக,  காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள் ளது. நேற்று முன்தினம் 22 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.


நீர்வரத்து அதிகரிப் பால், அங்குள்ள அருவிக ளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை,
பாறைகளாக தென்பட்ட ஐந்தருவிகள்,  இருக்கும் இடமே தெரி யாத அளவுக்கு வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகி றது.


 ஒகேனக்கல்லில் ஏற் பட்டுள்ள வெள்ளப்பெருக் கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரு விகளில் குளிக்கவும், பரி சல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 


மேலும், காவிரி கரையோர பகு திகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.


அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, விநா டிக்கு 21.520 கண்அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 23,989 கன அடியாக வும், மதியம் 27,665 கனஅடியாகவும் அதிகரித்தது. மாலையில் மேலும் அதிக ரித்து, விநாடிக்கு 31,102 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.


 இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 46.80 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 50.03 அடி யாகவும், மதியம் 50.63 அடியாகவும் உயர்ந்தது. 


மாலை நிலவரப்படி 51.38 அடியானது. ஒரே நாளில் நீர்மட்டம் 3.42 அடி வரை உயர்ந்துள்ளது அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 18.69 டி.எம்சியாக உள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயத்தால் 3வது நாளாக அடிப்பாலாறு. செட்டிப்பட்டி கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.


அதே போல், செட்டிப்பட்டி மற்றும் கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்தும் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால்,  தர்மபுரி மாவட்டம்  நெருப்பூர் மற்றும் நாகமரை, ஒட்டலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர் பகுதியில் உள்ள பள்ளி -கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ -மாணவிய ரும், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளும், பணிக்கு செல்வோரும் காவிரியை கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்