இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை 11 மணி அளவில் நெருங்கும். அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும். இதன் காரணமாக
வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும் .
10.11.2021:: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர் தர்மபுரி ஈரோடு கிருஷ்ணகிரி நாமக்கல் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .
11.11.2021: திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .
12.11.2021:, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
13.11.2021: நீலகிரி,கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
14.11.2021: நீலகிரி கோயம்புத்தூர் சேலம் திருப்பத்தூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில பகுதிகளில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
அதி கனமழை 5 இடங்களிலும் மிக கனமழை 21 இடங்களிலும் கனமழை 40 இடங்களிலும் பதிவாகியுள்ளது
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 31, காரைக்கால் (காரைக்கால்) 29, வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 25, தலைஞர் (நாகப்பட்டினம்) 24, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 22, பேராவூரணி (தஞ்சாவூர்) 20, திருவாரூர் (திருவாரூர் ) 19, ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்) 17, தஞ்சாவூர் (தஞ்சாவூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை) தலா 16, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 15 . மன்னார்குடி (திருவாரூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) தலா 14, முத்துப்பேட்டை (திருவாரூர்), நன்னிலம் (திருவாரூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), சீர்காளி (மயிலாடுதுறை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), சிதம்பரம் அவுஸ் (கடலூர்) தலா 13,
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்க கடல் பகுதிகள்
10.11.2021 , 11.11.2021 : தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்