தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 972, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 14 பேர் என 3 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 80 ஆயிரத்து 535 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 3 ஆயிரத்து 986 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 11  ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.


 


சென்னையில் 1,500-ஐ நெருங்கும் கொரோனா


சென்னையில் ஏற்கெனவே ஆயிரத்து 335 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஆயிரத்து 459 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக  இன்று 17 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது. 




 


சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது


தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 824 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8 லட்சத்து 66 ஆயிரத்து 913 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.