ஜாகுவார் நிறுவனம் இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. டாடாவின் நிறுவனங்களில் லேண்ட் ரோவர் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் மே மாதம் விற்பனைக்குவரவிற்கும் இந்த கார்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்தியாவில், ஜாகுவார் எப் பேஸ் கார்கள் 2.0 லிட்டர் திறன்கொண்ட நான்கு சிலிண்டர்கள் கொண்டுள்ளது. 82 லிட்டர் டேங்க் கேபாஸிட்டி கொண்ட பிரமாண்ட SUV இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 




5 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த வாகனம் சுமார் 2.5 டன் எடைகொண்டது. ஜாகுவார் நிறுவனத்திற்கே உரித்தான உடலமைப்போடு களமிறங்கும் இந்த கார் அதிகபட்சமாக 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 0விலிருந்து 60மைல் வேகமெடுக்க இதற்கு 8 நொடிகள் தேவைப்படும். மேற்குறிப்பிட்டது போல 82 லிட்டர் டேங்க் கேபாஸிட்டி கொண்ட இந்த வாகனம் சுமார் 14 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறுகின்றது. 




இந்திய சந்தையில் சுமார் 62 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வெள்ளை, மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் ரெட், மெட்டாலிக் ப்ளூ மற்றும் மெட்டாலிக் gray ஆகிய 5 வண்ணங்களில் ஜாகுவார் எப் பேஸ் விற்பனைக்கு வருகின்றது.