கோவையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட இரண்டு விலையில்லா சுத்திகரிக்கப்பட்ட ஏ.டி.எம்  குடிநீர் இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் வனதி சீனிவாசன் துவக்கி வைத்தார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் மற்றும் உக்கடம் பகுதியில் தலா ரூ.17.17 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஏ.டி.எம் குடிநீர் இயந்திரத்தை அவர் துவங்கி வைத்தார்.


20 லட்சம் லிட்டர் குடிநீர்:


கோவை மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். போன்ற எலட்ரானிக் அட்டையை கொண்டு ஒரு நாளைக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்ள முடியும், அப்பகுதியில் உள்ள ஆயிரம் குடும்பத்தினருக்கு இந்த எலட்ரானிக் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 


ராமநாதபுரம் பகுயில் உள்ள குடிநீர் மையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறும் போது, “பெண்கள் சிரமத்தை போக்கும் வகையில் ஒரு நாளுக்கு 20 லிட்டர் குடிநீர் எந்த நேரத்திலும் பிடித்து கொள்ளும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தொகுதி முழுவதும் 5 இடங்களில் இந்த இயந்திரம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இரண்டாவதாக உக்கடம் பகுதியில் இன்று குடிநீர் இயந்திரம் துவக்கி வைக்கிறோம். 




கோவை மாவட்டத்தில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. நேற்று அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு இதற்காக தான் சென்றேன். சாலை விவகாரத்தில் தமிழக அரசு கோவை மாநகராட்சிக்கு துரோகம் செய்து கொண்டுள்ளனர். இங்கிருந்து அதிகளவு வரி வருவாயை எடுத்து வருகின்றனர். குறைந்தபட்ச சாலைகளை கூட போடுவதில்லை. குப்பைகளை முறையாக தூய்மை செய்வதில்லை. அதற்கு கூட எம்.எல்.ஏ நேரடியாக தலையிட வேண்டியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் கொலுசு கொடுத்து வெற்றி பெற்ற தி.மு.க. பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மக்களை முட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு கோவை மக்கள் தகுத்த பாடம் புகட்டுவர்.


சூயஸ் திட்டத்திற்காக பொது குழாய்கள் அகற்றப்பட்டால், சூயஸிடம் மாநகராட்சி மூலமாக பேசுவோம். பொதுக்குழாய் எடுப்பதாக இருந்தால் அரசிடம் கண்டிப்பாக பேசுவோம். காயத்ரி ரகுராம் தனக்கு பிரச்சனை ஏற்படும் போது அதற்கு என கட்சியில் உள்ள நபர்களிடம் பேசலாம். பெண்களுக்கு எதிரான செயல்களுக்கு கட்சி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுவெளியில் பேசுவதை விட, யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேச முயற்சி செய்ய வேண்டும். தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை” என தெரிவித்தார்.


Also Read : Twitter: ட்விட்டரில் குழந்தைகள் ஆபாச படங்கள்.. ஒரே மாதத்தில் இந்தியாவில் 44 ஆயிரம் கணக்குகள் முடக்கம்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண