நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூக்கல் தொரை கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் செல்ல உயிலட்டி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உயிலட்டி என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக சாலையில்  பாறைகளும், மண் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கபட்டது. மேலும் நிலச்சரிவால் விவசாய நிலமும் அடித்து செல்லப்பட்டது. அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததால், பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.




இதனால் 13 கிராம மக்கள் மாற்றுப் பாதை வழியாக கோத்தகிரிக்கு சென்று வரும் நிலையில் மாநில நெடுஞ்சாலை துறையினர் சாலையில் குவிந்து கிடக்கும் பாறை மற்றும் மண்ணை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தினர் நேற்று இரவு விதிகளை மீறி ஜெசிபி எந்திரத்தை கொண்டு கால்வாய் பணி மேற்கொண்டதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து சம்பந்தபட்ட தோட்டத்தின் உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 




மலைப்பகுதி என்பதால் மழைநீரைச் சேமித்து விளைநிலங்களுக்குப் பயன்படுத்தும் நோக்கில் உச்சிப் பகுதியில் மழைநீர் சேமிப்புக் கால்வாய்களை அமைப்பது வழக்கம். இந்த நிலையில், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேமிப்புக் கால்வாயில் இன்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டு ராட்சதப் பாறைகளும் மரங்களும் அடித்துச் செல்லப்பட்டு அருகிலிருந்த சாலையில் குவிந்துள்ளன. இதையடுத்து சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண