கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


உலகப் பொதுமறை என திருக்குறள் போற்றப்படுகிறது. அதனை எழுதிய திருவள்ளுவர் எந்த அடையாளத்திற்குள்ளும் அடைபட்டு விடாத வகையில், வெள்ளை உடையணிந்த படமே தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்தாண்டு மாநில பாஜகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் காவி உடையணிந்து, திருநீறு பூசியபடி சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் காவி திருவள்ளுவர் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்கு, எதிர்ப்பு கிளம்பியது.  திருவள்ளுவர் படத்திற்கு காவிச் சாயம் பூச பாஜக முயற்சிப்பதாக புகார்கள் எழுந்தன.




இந்நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர். அப்போது பல்கலைக் கழகத்திற்குள் உள்ள நூலக நுழைவு வாயிலில் புதிதாக திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த படம் காவி உடையணிந்தபடி இருக்கும் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் வேளாண்மை பல்கலைக் கழகத்தில் காவி திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படம் திமுக ஆட்சிக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்டது. அதனைத் தான் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது வேளாண்மை பல்கலைகழக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் படம்  வைக்கப்பட்டுள்ளது. இது திருவள்ளுவரை ஏதோ மதச்சாயலுக்குள் கொண்டு வரும் சதித் திட்டம் எனக் கருதுகிறோம். திமுக அரசால் காவி திருவள்ளுவர் படம் வைக்க வாய்ப்பில்லை. அரசின் கவனத்திற்கு வராமல் அதிகாரிகளால் காவி திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.


PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!




கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல முறை திருவள்ளுவருக்கு காவி உடையணிவிக்க முயன்றதும், எதிர்ப்புகள் வந்ததால் மாற்றப்பட்டதும் நடந்தது. அரசு உடனடியாக தலையீட்டு காவி திருவள்ளுவர் படத்தை அப்புறப்படுத்த வேண்டும். வெள்ளை உடையணிந்த எந்த மதச்சார்பும் இல்லாத அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வைக்க வேண்டும். இப்படம் வைப்பதற்கான காரணம் யார் என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும், ஒருவேளை காவி திருவள்ளுவர் படம் வைத்ததில் உள்நோக்கம் இருந்தால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


காவி திருவள்ளுவர் படம் சர்ச்சை குறித்து வேளாண்மை பல்கலைக் கழகத் தரப்பு விளக்கம் கேட்க, அப்பல்கலைகழக மக்கள் தொடர்புத் துறை அதிகாரி முரளி அர்த்தநாரியை தொடர்புக் கொண்டோம். அப்போது பேசிய அவர், “காவி நிறத்தில் திருவள்ளுவர் படம் இருக்க வாய்ப்பில்லை. நூலகத்தில் ஒரு முறை செக் செய்து விட்டு சொல்கிறேன்” என பதிலளித்தார்.


‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!