கோவையில் ’HAPPY  BIRTH DAY மின்சார கண்ணா’ என செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


கரூர் சட்ட மன்ற உறுப்பினராக உள்ள செந்தில் பாலாஜி, திமுக  அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று 47 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அமைச்சர்கள் அரசு அலுவலர்கள், ஆதரவாளர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு  வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 




அந்த போஸ்டர்களில் அவர் பதவி வகிக்கும் துறையான மின்சாரத் துறையை குறிப்பிட்டு காட்டும் வகையில் "Happy Birth Day மின்சார கண்ணா" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் திமுக கட்சியின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் புகைப்படம், தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் கொத்து அளித்த புகைப்படம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட கோவை மாநகர திமுக நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த போஸ்டர்கள் கோவை மாநகரில் அவினாசி சாலை மேம்பாலத்திலும், உக்கடம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கோவையில் திமுக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், மறைமுகமாக எதிர்கட்சிகளை விமர்சிக்கும் வகையிலான போஸ்டர்களை தொடர்ந்து ஒட்டி வருவது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண