Swiggy : ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவில் புகையிலை பொருள் ; உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு..

ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவில் கூல் லிப் புகையிலை இருந்ததது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

Continues below advertisement

கோவையில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவில் கூல் லிப் புகையிலை இருந்ததது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

Continues below advertisement

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின் என்ற பெண், பிரபல உணவகமான கீதா கேண்டினில் பிற்பகல் உணவு ஸ்விக்கி காம்போ ஆஃபர் மூலம் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வந்த உணவை அவரும் அவரது குழந்தையும் சாப்பிடத் துவங்கி உள்ளனர். திடீரென உணவில் டீ தூள் போன்று பொட்டலம் ஒன்று இருந்து உள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அதனை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது அது கூல் லீப் என்ற புகையிலை பொருள் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்து உள்ளார். இந்நிலையில் அந்த உணவை உண்டு குழந்தை வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. குழந்தைக்கு மாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதை 108 அவசர ஊர்தியில் அங்கு வந்த மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இது குறித்து ஜாஸ்மின் கூறுகையில், காம்போ ஆஃபரில் ஸ்விக்கி நிறுவனத்தின் மீது உரிய விசாரணை நடத்தி உணவில் எவ்வாறு இது போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது என்பது குறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். உணவு ஆர்டர் செய்யும் பெற்றோர்கள் உணவு பொருட்கள் வந்தவுடன், அதனை ஆய்வு செய்த பின்பு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பாதிக்கப்பட்ட தாய் புகார் அளிக்க உள்ளார்.  இது குறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தராஜன் சம்பந்தப்பட்ட கடைக்கு உடனடியாக விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரமற்ற முறையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணியுமாறும், கடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரிமையாளருக்கு அறிவுரை வழங்கியும் சென்றார். மேலும் சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

Continues below advertisement