கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 514 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து  19 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 4236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 13  ஆயிரத்து 227 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 12 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2041 ஆக உயர்ந்துள்ளது.




தடுப்பூசிகள் இருப்பு குறைவு காரணமாக நாளை கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஈரோடுதிருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 420 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 4093 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 89632 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 84950 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 589 ஆகவும் உயர்ந்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 270 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 321 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 7 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 82373 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 79952 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 757 ஆகவும் உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 87 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட 12 பேருக்கு இன்று கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 66 பேர் குணமடைந்துள்ள நிலையில், 675 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 28353 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27514 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.


தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.