கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் அருகே தமிழக பதிவெண் கொண்ட கல்லூரி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பகவான் ஹால் பகுதியில் சென்ற போது திடீரென போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
கோவை குரும்பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றனர். அப்போது கர்நாடக மாநிலம் சிக்மங்களுர் அருகே உள்ள அப்போது, அந்தப் பேருந்தில் முன் பகுதியில் நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராஹீம் பெயர் எழுதப்பட்டு இருந்தது. மேலும், வன்முறையை தூண்டும் விதத்திலான வாசகங்களும் எழுதப்பட்டிருந்தது.
பேருந்தில் வன்முறை வாசகங்கள்
இதனையடுத்து, பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் காவல்நிலையத்தில் கொண்டு சென்றனர்.. தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் அந்த பேருந்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன் போலீசார் அந்த பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர். அதில் இருந்து மாணவர்கள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்துகள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் மட்டுமே எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்றும், வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது என காவல்துறையினர் தெரிவித்தனர். மீறி, அப்படி எழுதப்பட்டிருப்பது வாகன சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இது தொடர்பாக கோவை மாநகரம் மற்றும் புறநகர வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
