சிறந்த ஆன்மீகவாதியும், சமூக சேவையாளருமான ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி டாக்டர் பட்டம் வழங்கி அவரை சிறப்பித்துள்ளது.
சிறந்த ஆன்மீகவாதியும், சமூக சேவையாளருமானவர் ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி. இவரை, அம்மா என்று அழைப்பார்கள். ஆன்மீகத்துறையில் அமிர்தானந்தமயி அவர்களின் மகத்தான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையிலும், கல்வி, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மனிதாபிமானம், அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றில் அவர் அளித்து வரும் சிறப்பான பங்களிப்பிற்காக கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி அவருக்கு கடந்த 14-ஆம் தேதி டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாக அம்ரிதா விஷ்வா வித்யாபீடம் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாவுக்கு பட்டம் வழங்கியவுடன், KIIT இன் துணைவேந்தர் பேராசிரியர் சஸ்மிதா சமந்தா, அம்மா குறித்து பேசுகையில், "சண்டையால் சிதைந்து, மன அழுத்தத்தால் அதிர்ந்து போன உலகில், மனிதகுலம் முழுவதும் நம்பிக்கையின் பேரில் உங்கள் கண்களை உயர்த்துகிறது. அமைதி மற்றும் சமநிலையுடன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள உணர்ச்சி ஆதரவு மற்றும் வலிமையைக் கண்டறிவது என பாரத சம்ஸ்காரத்தின் ஒளியின் வெளிப்பாடு, நீங்கள் எங்கு சென்றாலும், நீங்கள் எதுவாக இருந்தாலும் பிரகாசிக்கிறீர்கள்” என்றார்.
மேலும், மாதா அமிர்தானந்தமயி மடத்தின், ஆன்மீக, சுற்றுச்சூழல் மற்றும் மனிதாபிமான சாதனைகளை பாராட்டி பேசிய துணைவேந்தர், ”சமூக பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் ஐக்கிய நாடுகள் சபை, வத்திக்கான் மற்றும் உலக மதங்களின் பாராளுமன்றம் போன்றவைகளில் அம்மா பகிர்ந்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் அல்லது உலகில் வேறு எங்கும் நிலநடுக்கம் அல்லது சுனாமி வந்தபோது, மக்களின் துன்பத்தை தணிக்க முன்னணியில் இருந்தீர்கள். தனிப்பட்ட முறையில் அணுகக்கூடிய ஆன்மிகத் தலைவராகவும் இருக்கிறீர்கள்” என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, முழுமையான கல்வி குறித்த தனது தொலைநோக்குப் பார்வை பற்றி அம்மா பேசினார். அதில், "உள்ளேயும் வெளியேயும் ஒளி பரவ கல்வி வேண்டும் . கல்வி சமமாக பகுத்தறிவையும் சிந்தனையையும் வளர்க்க வேண்டும். வெளி உலகத்தை அறிவது போலவே அக உலகத்தையும் அறியும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நமது வெளிப்புறக் கண்களைப் போலவே நம் உள் கண்ணையும் திறந்து வைக்க கல்வி நமக்குக் கற்பிக்க வேண்டும். தேசம், உலகம், அவரது சக மனிதர்கள், பிற உயிரினங்கள், இயற்கை மற்றும் கடவுள் ஆகியோர் இடையே ஆழமான பிணைப்பை வலுப்படுத்தவும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்வி வேண்டும்” என்றார்.
இது அம்மாவுக்கு வழங்கப்படும் மூன்றாவது டாக்டர் பட்டம் ஆகும். 2019 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
KIIT-இன் வேந்தர், பேராசிரியர் வேத் பிரகாஷ் முன்னிலையில் அம்மாவுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பேராசிரியர் (டாக்டர்) சுப்ரத்குமார் ஆச்சார்யா, பதிவாளர் பேராசிரியர் ஞான ரஞ்சன் மொஹந்தி, தலைமை விருந்தினர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான், மாண்புமிகு கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் மற்றும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள், நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஜீன்-மேரி லெஹ்ன் (வேதியியல் 1987) மற்றும் ENAM செக்யூரிட்டீஸ் இணை நிறுவனர் ஸ்ரீ வல்லப் பன்சாலி, நிறுவனர் தேஷ் அப்னாயன் சகயோக் அறக்கட்டளை, FLAME பல்கலைக்கழகம் இயக்குனர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.