கோவை சரவணம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது,  ”கலவரத்தில் பிறந்தவர்கள் தான் பாஜகவினர். கலவரம் தான் அவர்களின் இலக்கு. யானைக்கும் மனிதனுக்கு மதம் பிடித்தால் அழிவு தான். பிறப்பில் உயர்வு தாழ்வு பாகுபாடு பார்க்கும் இவர்களில் இருந்து வெளிப்பாடு வேண்டும் என்பதே கோட்பாடு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது தான் நிஜம். சாதி மதம் உணர்வு ஒழிந்த பிறகு தான் தமிழன் என்ற உணர்வு மேல் ஒங்கும். சிவன், முருகனை வழிபடும் வீர கூட்டம் தான் நாம். யார் சிறுபான்மை? அவனுக்கும் ஜி.எஸ்.டி 18% தான், உனக்கும் ஜி.எஸ்.டி 18% தான். மதத்தை காப்பாற்றி என்ன செய்ய போகிறீர்கள். சாதியும் மதமும் மயிருக்கு சமம். சாதிக்கும் மதத்திற்கும் பார்த்து வாக்கு போடுவாய் என்றால் செத்து போ. இவர்களுக்கு ஒட்டு போட்டு என்ன பண்ணிட்டு இருக்காங்க? மோடி ரோடு ஷோ என்ற பெயரில் கரகாட்டம் ஆடிட்டு இருக்கிறார்.


இராமர் வேசம் போட்டு தினமும் ரோட்டில் பிட்சை எடுத்து வருகிறார்கள்.  நேர்மையான அதிகாரி, ஐ.பி.எஸ் அதிகாரி ஒற்றை ஆளாக சுதந்திரம் வாங்கி கொடுத்த மாதிரி பேசிட்டு இருக்கிறார். திமுக எதிர்கட்சியாக இருந்தால் கோ பேக் மோடி, ஆட்சிக்கு வந்தவுடன் வெல்கம் மோடி என்று சொல்லும் திமுகவை நம்பி மீண்டும் வாக்கு செலுத்த போகிறோமா? திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது. இந்திக்காரன்கள் மூலம் தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். காலையில் புரோட்டா, நைட் கஞ்சா விற்பான் இந்திக்காரன். பாஜகவிற்கு ஏன் தமிழ்நாடு மக்களின் வாக்குகள் வேண்டும். 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டிற்கு என்ன செய்தார்கள். காவேரி தண்ணீர் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? காங்கிரசின் நிலைப்பாடு என்ன? மேகதாது அணை கட்டுவது குறித்து அண்ணாமலையின் நிலைப்பாடு என்ன?




பாடல் பாடிய சீமான்


ரயிலில் பிடித்த 4 கோடி கருப்பு பணம் எங்கு இருந்து வந்துள்ளது. பாஜகவும் காங்கிரசும் ஆட்சி செய்து எங்களை என்ன நிலைமையில் வைத்து உள்ளீர்கள்? திமுக இன்னும் டாஸ்மாக் இன்னும் ஏன் மூடவில்லை? 10 ஆண்டுகளில் பிரதமர் ஒருமுறையாவது பத்திரிக்கையாளர்களை சந்தித்து உள்ளாரா? உலகத்தின் குப்பை மேடாக மாறியது தான், கிளின் இந்தியாவின் சாதனை. புவி வெப்பம் ஆகுவதை ஏன் இன்னும் தடுக்கவில்லை? விண்ணுக்கு சந்திராயன் அனுப்பினாலும், கழிவை மனிதன் அள்ளுவது தான் வளர்ச்சியா?வாக்கு பெட்டியில் ஒன்னும் செய்ய முடியாது என்பவர்கள், மாணவிகள் மூக்குத்தியில் பிட் கொண்டு போகிறாள் என்பதை எப்படி நம்புகிறாய்?


தேசிய மலரான தாமரை சின்னத்தை எடு. இல்லை என்றால் புலி சின்னத்தை எனக்கு கொடு. இல்லை காலிஃப்ளவரை தேசிய மலராக அறிவிக்க வேண்டும். காந்தி படத்தை எடு. அதற்கு பிரதமர் மோடி படத்தை வேண்டுமானால் போடு. என்கிட்ட காசு இல்லை. இருந்தால் வழக்கு போட்டிருப்பேன். கோவையை யூனியன் பிரதேசமாக அறிவித்து குஜராத் உடன் இணைக்க போகிறார்கள். உன்னை கும்பிடுகிறேன். அந்த விச செடிகளை வளர விடாதே. தேசிய திருடர்களை உள்ளே விடாதே. தம்பி அண்ணாமலையை கர்நாடகவில் நின்று எம்பியாக சொல்லு. மதத்துக்கு ஒட்டு போடுவியா? சாதிக்கு ஒட்டு போடுவியா? நீயே முடிவு செய்து கொள். உன் இடத்தை தக்க வைத்துக்கொள். மக்களுக்கு நல்லதே நடக்க கூடாது என்பது தான் திராவிட சக்திகள்” எனத் தெரிவித்தார். ‘வருடம் நாலு தேர்தல் நடக்குது, ’ஏற்றோம் வரணும்’, ’ஓட்டு போடப் போற பொண்ணு’ உள்ளிட்ட பாடல்களை சீமான் பாடியதும் கூட்டம் கைதட்டி விசில் அடித்து வரவேற்றனர்