'நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும்’ - எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை

எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா அலியா தர்காவில் அதிமுக சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Continues below advertisement

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும் எனவும், 40 தொகுதிகளிலும் வெல்வோம் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா அலியா தர்காவில் அதிமுக சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு தமிழ் மகன் உசேன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வர வேண்டியும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும். அப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி 72 தர்காக்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட உள்ளது. ஆன்மிக பயணமாக நான் 39வது மாவட்டமாக கோவைக்கு வந்து பிரார்த்தனை செய்தேன். 38 மாவட்டங்களை விட கோவையில் தொண்டர்கள் சமத்துவமாக வந்து பிரார்த்தனை செய்துள்ளனர். 


மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வேண்டும். 50 ஆண்டுகளில் மக்களுக்கு அதிக திட்டம் தந்தது அதிமுக தான். மற்ற எந்த கட்சியும் இல்லை. உலமாக்கள் ஓய்வூதிய திட்டம் எம்.ஜி.ஆர். தந்தார். இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர்கள் என சிலர் சொல்லலாம். ஆனால் இஸ்லாமியர் பாதுகாப்பான இயக்கம் அதிமுக தான்” எனத் தெரிவித்த அவர், இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை பட்டியலிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர், “பல திட்டங்களை அள்ளி தந்தவர் எஸ்.பி.வேலுமணி. ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்களா? எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. சாலைகள் குளங்களை போல இருக்கிறது. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை, வன்முறை, பாலியல் வன்முறை நடக்கிறது. அதிமுக தான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கேடயம். நான் இஸ்லாமியராக இருந்தாலும் எனக்கு சாதி, மதம் கிடையாது” எனத் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமையும். அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement