கோவையில் காணாமல்போன 12 வயதுடைய சிறுமியை காவல் துறையினர் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் மீட்டனர்.


கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு தம்பதியினருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் இக்குழந்தைகளின் தாய் பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.  இந்நிலையில் இத்தம்பதியினர் நேற்று சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் தங்களது 12 வயது மகளை காணவில்லை என புகார் ஒன்றை அளித்துள்ளனர். நேற்று மாலை வீட்டிலிருந்து சிறுமி வெளியே சென்றபின்பு திரும்பி வரவில்லை என மகன் பெற்றோர்களுக்கு செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு கூறியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்தும் தேடி உள்ளனர். இருப்பினும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. 


இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிறுமியுடைய உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் அங்கு சுற்றியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோவை மாநகர காவல் துறை சார்பாக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுமி பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் தகவல் தெரிவிக்குமாறு மாநகர காவல் துறை சார்பாக சமூக வலைதளங்களில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே 12 வயது சிறுமியை காணவில்லை என்ற தகவலும், அவர் குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் என பெற்றோரின் தொடர்பு எண்களுடன் பதிவிடப்பட்ட பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 


இந்நிலையில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை, காவல் துறையினர் மீட்டனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையினருக்கு மாவட்ட காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் பொள்ளாச்சி சென்ற மாநகர காவல் துறையினரிடம் சிறுமியை, மாவட்ட காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்க மாநகர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுமி எங்கு சென்றார்? எதற்காக சென்றார்? உள்ளிட்டவை குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம், மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை ண