தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அரசு அனைத்து தரப்பிலும் ஆலோசித்து முடிவெடுக்கும் என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில்  சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியது. இவற்றை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். சிறுதானிய கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை அமைச்சர் ஒவ்வொன்றாக பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”சர்வதேச சிறு தானிய கருத்தரங்கு மற்றும் எதிர்கால உணவு கண்காட்சி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது. 




இந்த கண்காட்சியில் புதிய ரக சிறு தானியங்கள், விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. சிறு தானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதே போல் கண்காட்சி வரும்  28 ம் தேதி தருமபுரியில் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் சிறுதானியங்கள் பயரிட  ஊக்கவிக்கப்பட்டு வருகிறது. 10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்படுகிறது. 38.2 மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 




வெளிநாடுகளில் புதிய பயிற்சியை மேற்கொள்ள ஆராய்ச்சி மாணவர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இந்த திட்டம் பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டு உள்ளது பாராட்டதக்கது. இதற்காக இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களின் தரத்தை மேம்படுத்த இந்த திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. சிறு தானிய வளர்ச்சிக்காக தரமான விதைகள் உள்ளிட்ட செயல்பாட்டிற்காக 82 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண