கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 21 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தினசரி தொற்று பாதிப்பு 200 க்கும் கீழ் குறைந்துள்ளது. கோவையில் இன்று 183 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 27 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 22 ஆயிரத்து 801 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2141 ஆக உள்ளது. கோவையில் கொரோனா தொற்று விகிதம் 2.3 ஆக குறைந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோட்டில் இன்று 141 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 15 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 92325 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89763 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 626 ஆக உள்ளது. ஈரோட்டில் தொற்று விகிதம் 1.8 ஆக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 97 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 132 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 86916 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 84539 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 815 ஆகவும் உள்ளது. திருப்பூரில் கொரோனா தொற்று விகிதம் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 7 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 78 பேர் குணமடைந்துள்ள நிலையில், 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 30013 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29002 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 173 ஆக உள்ளது. நீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 1.9 ஆக உள்ளது.