கோவையில் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீ ஆனந்தாஸ் குழும உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.




பிரபல உணவாக குழுமமான ஸ்ரீ ஆனந்தாஸ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. மொத்தமாக 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆனந்தாஸ் குழுமம் செயல்பட்டு வருகிறது. அக்குழுமத்தின் சார்பில் கோவை மாநகர பகுதிகளில் மட்டும் 8 உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆனந்தாஸ் குழும உணவகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் 40 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




கோவையில் வடவள்ளி, காந்திபுரம், லட்சுமி மில், ஆர்.எஸ்.புரம், போத்தனூர், சுந்தராபுரம், சாய்பாபா காலனி,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஸ்ரீ ஆனந்தாஸ் குழும உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல அக்குழுமத்திற்கு சொந்தமான இனிப்பகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. ஆனந்தாஸ் உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், இச்சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை  வருமான வரித்துறை அதிகாரிகள் எடுப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. பிரபல உணவகத்தில் நடத்தப்பட்டு வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண