• குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக இராணுவ தளபதி மனோஜ் முகுன்ய்த் நரவனே இன்று விபத்து நடந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை வீடியோ எடுத்த ஜோபாலின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உண்மை கண்டறியும் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செல்போனில் பதிவாகி உள்ள வீடியோ எப்போது எடுக்கப்பட்டது?, அதில் இருக்கும் தகவல்கள் உண்மை தானா? என்பதை கண்டறிய நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  • குன்னூர் அருகே விபத்துள்ளான ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் உடைத்து எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் விமானப் படையினர், இராணுவத்தினர், குன்னூர் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  • கோவை குற்றாலத்திற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக அருவிக்கு செல்ல கடந்த 2 மாதங்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.

  • கோவையில் இறுக்கமான சட்டை அணிந்த 11 ம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் சிவரஞ்சித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவனை ஆசிரியர் தாக்கியது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சிவரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக, அதிமுக ஆகிய கட்சிகள் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • வன்னியர்களுக்கு இன்னொரு ராமதாஸ் பிறக்க வேண்டும். தனி இடஒதுக்கீட்டை முன்பே பெற்றிருந்தால் யாரிடமும் கூட்டணி சேர கையேந்தியிருக்க அவசியம் இருந்திருக்காது என பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் சேலத்தில் தெரிவித்துள்ளார்.

  • இன்று நடக்கவிருக்கும் அதிமுக உட்கட்சித் தேர்தல் பணிகளை நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் அலுவலகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார்.

  • தருமபுரி மருத்துவ கல்லூரி மாணவரை ராகிங் செய்ய 4 சீனியர் மாணவர்கள் மீது காவல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • கோவை ஆத்துப்பாலம் பகுதியில் சிவக்குமார் என்பவருக்கி சொந்தமான சாக்கு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின