கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கான மின்மயானத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.


கோவை மாவட்டம் சீர்நாயக்கன்பாளையம் பகுதியில் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கான எரியூட்டும் மின்மயானத்தின் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான கல்வெட்டை திறந்து வைத்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, செல்லப்பிராணிகளுக்காக அமைக்கப்பட்ட பின்னர் தகன மேடைகளை பார்வையிட்டனர்.




இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி  குமார் பாடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உயிரிழக்கும் நாய்கள் மற்றும் பூனைகளுக்களை தகனம் செய்ய மின் மயானம் தனியார் அமைப்பு மூலமாக, கோவையில் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. தங்களது வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளை இங்கு தகனம் செய்து கொள்ளும் வகையில் இந்த மின்மயானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சாலையில் உயிரிழக்கும், தெரு நாய்களை, இலவசமாக தகனம் செய்து கொள்ளவும், ஒரு நாளைக்கு ஆறு நாய்கள் எரியூடப்படும் வகையில், உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் மயானம் தற்போது முழுக்க முழுக்க எல்பிஜி கேஸ் மூலமாக, இறந்த விலங்குகளின், முழு கழிவுகளும், முற்றிலும் எரிக்கப்பட்டு, அதன் மாசு, வெளியே போகாமலும் பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார முறைகேடுகளும் இல்லாமல், மேலே புகை செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.




வீட்டு நாய்கள் பூனைகளை எரியூட்ட எவ்வளவு செலவாகும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதனை நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். எல்பிஜி கேஸ் செலவு பிற செலவுகளை கணக்கிட்டு அதற்கான கட்டண தொகை அறிவிக்கப்படும். மாநகரில் சாலை ஓரங்களில் உயிரிழக்கும் நாய், பூனைகளை, யார் வேண்டுமானாலும் இங்கு கொண்டு வரலாம். தெரு நாய்களை  மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக நாய்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றதில், தோராயமாக ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. தெரு நாய்கள் இயற்கைக்கு பாதிப்பு இல்லாமல், இந்த மின் மயானத்தில் தகனம் செய்வதால், பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இயற்கை பிரியர்கள் மத்தியிலும்  நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதே நிலை தொடர்ந்தால், கோவை புறநகர் பகுதியிலும் மின்மயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்” எனப் பதிலளித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண