கோவைகுனியமுத்தூர்பகுதியில்பிரபலஸ்ரீகிருஷ்ணாகலைமற்றும்அறிவியல்கல்லூரிசெயல்பட்டுவருகிறது. இந்தக்கல்லூரியில்சுற்றுச்சுவர்கட்டுமானபணிகள்நடைபெற்றுவருகின்றன. இப்பணிகளில்வெளிமாநிலதொழிலாளர்கள்ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையேஇன்றுகாலைமுதல்கோவைமாநகரப்பகுதிகளில்பரவலாகமிதமானமழைபெய்துவருகிறது. இந்நிலையில்இன்றுமாலைமழைகாரணமாகசுற்றுச்சுவர்திடீரெனஇடிந்துவிழுந்ததாககூறப்படுகிறது.
சுற்றுச்சுவர்இடிந்துவிழுந்ததில்கட்டுமானபணியில்ஈடுபட்டுக்கொண்டிருந்த5 தொழிலாளர்கள்இடிபாடுகளில்சிக்கிக்கொண்டனர். இதுகுறித்துதகவலறிந்துவந்தகாவல்துறையினர்மற்றும்தீயணைப்புத்துறையினர்மீட்புபணிகளில்ஈடுபட்டனர். சுவர்இடிந்துவிழுந்ததில்ஆந்திராமாநிலத்தைசேர்ந்தகண்ணையன், ஜெகநாதன், நர்கேலா சத்யம்மற்றும்மேற்குவங்கத்தைசேர்ந்தபிஸ்கோயாஸ்ஆகிய4 தொழிலாளர்கள்சம்பவஇடத்திலேயேபரிதாபமாகஉயிரிழந்தனர். மேலும்படுகாயமடைந்தமேற்கு வங்கத்தைச் சேர்ந்த பரூன் கோஸ் என்பவர்சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரூன் கோஸ் உயிரிழந்தார். இதனால் இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஐந்ததாக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சீனிவாசன் மீது குனியமுத்தூர்காவல்துறையினர்விசாரணைமேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் குறித்து பேட்டியளித்த கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், ”இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கல்லூரியை சுற்றியுள்ள அனைத்து சுவர்களுமே இந்த நிலைமையில் தான் உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் பொழுது நானும், செயலாளரும் இங்கு வந்து பார்த்தோம். அப்பொழுதே மழை நீர் முழங்கால் அளவிற்கு இருந்தது. ஏற்கனவே இருமுறை எச்சரித்தும் கல்லூரி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகம் இந்த நிலைமையில் தான் உள்ளது.
சுவர் இடிந்து விழுந்ததற்கு மாநகராட்சி பொறுப்பேற்க முடியாது இருந்தாலும், பலமுறை மாநகராட்சி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் கல்லூரி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. கல்லூரி நிர்வாகத்தின் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுற்றுச்சுவர் கம்பி எதுவுமில்லாமல் வெறும் கற்களை மட்டுமே வைத்து கட்டியுள்ளார்கள். பழனியப்பா நகரில் உள்ள ஓடையை ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் கட்டி உள்ளார்கள்” என்றார்.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கூறும்போது, “கல்லூரி நிர்வாக தரப்பில் இருந்து சம்பவ இடத்திற்கு யாரும் வரவில்லை. அவர்கள் ஒப்பந்ததாரர் தான் பொறுப்பு என தெரிவிக்கின்றனர். அனுமதியில்லாமல் கட்டியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இதுவரை யாரும் வரவில்லை. போன் செய்தால் துண்டிக்கிறார்கள். அதிகாரிகள் நாளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள். கண்டிப்பாக நிர்வாகம் பதில் சொல்லியாக வேண்டும். நான்கு உயிர் பலியாகியுள்ளது.
காவல்துறையிடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அலட்சியமாக இருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகத்தின் மீது மாநகராட்சி சார்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி ஆணையாளர், ஆட்சியரிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவை மாநகராட்சி சார்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
