கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் போது, இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை குனியமுத்தூர் பகுதியில் பிரபல ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் வெளி மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இன்று காலை முதல் கோவை மாநகரப் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மழை காரணமாக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.


சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  சுவர் இடிந்து விழுந்ததில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கண்ணையன், ஜெகநாதன், சச்சிம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த விபிஸ் கோயாஸ் ஆகிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.












ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண