கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட கூடுதலாக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 366 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து  23 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3957 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 17  ஆயிரத்து 812 பேராக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கோவையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2092 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கொரோனா தொற்று விகிதம் 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. கோவை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு நாளையும் தடுப்பூசி போடப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 474 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்புகள், இன்று 104 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 5 நாட்களில் 2892 பேருக்கு கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. 1902 பேர் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர். 5 நாட்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.




ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 251 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 91108 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 87067 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 611 ஆகவும் உயர்ந்துள்ளது.


ஈரோட்டில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 360 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்புகள், இன்று 109 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 5 நாட்களில் 693 பேருக்கு கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. 1461 பேர் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர். 5 நாட்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 185 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 297 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பால் 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 84703 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 82208 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 784 ஆகவும் உள்ளது.


திருப்பூரில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 231 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்புகள், இன்று 46 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 5 நாட்களில் 1349 பேருக்கு கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. 1268 பேர் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர். 5 நாட்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.




நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் சற்று அதிகரித்து வருகிறது. இன்று 125 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.126 பேர் குணமடைந்துள்ள நிலையில், 858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 29112 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28087 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.


நீலகிரியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 77 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்புகள், இன்று 48 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 5 நாட்களில் 508 பேருக்கு கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. 442 பேர் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர். 5 நாட்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


கோவை, ஈரோடு, நீலகிரியில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், நீலகிரியில் அதிகரித்து வருகிறது.